- Ads -
Home சினிமா சினி நியூஸ் கொரோனா நேரத்தில் பார்ட்டிக்கு போய் மது அருந்துவேனா? நடிகை ஆவேசம்!

கொரோனா நேரத்தில் பார்ட்டிக்கு போய் மது அருந்துவேனா? நடிகை ஆவேசம்!

பார்ட்டியில் கலந்துகொண்டு போதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும்

பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரே. சஜ்னி என்ற படம் மூலம் அறிமுகமான இவர், கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆர்.மாதேஷ் இயக்கிய ‘மிரட்டல்’ படத்தில் நடித்திருந்தார்.

5e8a30cf06454f807ffe7d00827ddd06

இந்தப் படத்தில் வினய் ஹீரோவாக நடித்திருந்தார். சந்தானம், பிரபு, பிரதீப் ராவத், பாண்டியராஜன் உட்பட பலர் நடித்திருந்தனர். தெலுங்கில் விஷ்ணுவர்தன் பாபு, ஜெனிலியா நடிப்பில் வெளியான தீ படத்தின் ரீமேக் இது. ஆக்‌ஷன் காமெடி படமான இது கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் பெரிய வெற்றியை பெறவில்லை.
 
இதையடுத்து, கன்னட படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், சில படங்களை தமிழில் தயாரித்தார். விமல், ஆஸ்னா ஜாவேரி நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தை தயாரித்தார். அடுத்து இப்போது ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா நடித்துள்ள சண்டக்காரி, அட்டக்கத்தி தினேஷ், தீப்தி சதி நடித்துள்ள நானும் சிங்கிள்தான் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

கன்னட படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். கொரோனா காரணமாக இப்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை நடிகை ஷர்மிளா தனது ஆண் நண்பர் லோகேஷ் வசந்த் என்பவருடன் ஜாக்குவார் காரில் சென்றுகொண்டிருந்தார். பெங்களூரில் உள்ள ஹைகிரண்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட வசந்த் நகரில் வந்தபோது, பாலம் ஒன்றின் தூணில் திடீரென்று கார் மோதியது.

இதில் நடிகை ஷர்மிளா, படுகாயமடைந்தார். அவரது முகத்திலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் அருகிள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

பார்ட்டியில் கலந்துகொண்டு போதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்று செய்திகள் வெளியாயின. இந்நிலையில் நடிகை ஷர்மிளா இதை மறுத்துள்ளார். அவர் கூறும்போது, எனக்கு கடுமையான வயிற்றுவலி. அதனால் என் நண்பர் லோகேஷ், வாகனத்துக்கான பாஸ் வைத்திருந்த நண்பர் டான் தாமஸ் ஆகியோரிடம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் செல்லுமாறு சொன்னேன்.

அவர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. நான் அப்போது கார் ஓட்டவில்லை. பின்னால் தான் அமர்ந்திருந்தேன். நண்பர் டான், கார் ஓட்டினார். இந்த விபத்தில் என் கழுத்தில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். இதுதான் நடந்தது.

அதற்குள் பார்ட்டிக்கு சென்றேன், போதையில் கார் ஓட்டினேன் என்று கதை கட்டி விட்டார்கள். இந்த கொரோனா நேரத்தில் சமூக விலகலைப் பற்றி வலியுறுத்தி வருபவள் நான். நான் எப்படி பார்ட்டிக்கு போவேன்? உண்மை தெரியாமல் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார், ஷர்மிளா.

Source: Vellithirai News

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version