- Ads -
Home புகார் பெட்டி கடையம் கோவிலை கோடம்பாக்கம் ஆக்கிய இந்து சமய அறநிலையத்துறை!

கடையம் கோவிலை கோடம்பாக்கம் ஆக்கிய இந்து சமய அறநிலையத்துறை!

ஆகம விதிகளை மீறி கடையம் ஶ்ரீ நித்யகல்யாணி அம்மன் கோவிலில் சினிமா படப்பிடிப்பு

kadayam temple1 - 2025

கோவிலை கோடம்பாக்கம் ஆக்கிய இந்து சமய அறநிலையத்துறை

ஆகம விதிகளை மீறி கடையம் ஶ்ரீ நித்யகல்யாணி அம்மன் கோவிலில் சினிமா படப்பிடிப்பு

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் பழமையும் பெருமையும் வாய்ந்த மிகப் பிரபலமான கோவில் ஶ்ரீ நித்தியகல்யாணி அம்மன் திருக்கோவில். இங்கு சித்தர்கள் மகாகவி பாரதியார் போன்ற பிரபலமானவர்கள் வழிபட்டு பல பாடல்களை எழுதியுள்ளனர். கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மிகப்பெரிய சிவாலயங்களில் இதுவும் ஒன்று

இப்படி பெருமை வாய்ந்த கோயிலை சினிமா படப்பிடிப்புக்கு திருக்கோவில் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்

புனிதமான திருக்கோவிலை பணத்திற்காக வாடகைக்கு கொடுத்து ஆகம விதிகளுக்குப் புறம்பாக வரைமுறை இல்லாமல் பலர் வந்து செல்கின்றனர்.

சினிமா செட் அமைக்கும் பணி என்ற பெயரில் கோவிலையும் அதன் வளாகத்தையும் நாசப்படுத்தி வருகின்றனர்.

சினிமா சூட்டிங் இங்கு நடப்பதால் பக்தர்கள் நித்திய பூஜைக்கு செல்லவிடாமல் தடுக்கப்படுகிறது

கோவில் வளாகங்களில் சாதாரணமாக பக்தர்கள் குடும்பத்துடன் படம் எடுத்தால் கோவிலுக்குள் செல்போன் உபயோகிக்க கூடாது என கட்டளையிடும் அறநிலையத்துறை பல்லாயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு திரைப்பட சூட்டிங் அனுமதித்துள்ளது பக்தர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது

கணக்கில் வந்தும் வராமலும் திரைப்படத்துறையினரிடம் சுமார் 50 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது

கோவில் கருவறை வரை சென்று எடுக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியதும் கண்டனத்துக்குரியது மாகும்

கண்ணியமிக்க திருக்கோவிலை காட்சிப் பொருளாக்கி கோவிலை கோடம்பாக்கம் போல் மாற்றிய இந்து சமய அறநிலையத் துறையில் செயல் வெட்ககரமானது

அடுத்த நான்கு நாட்களுக்கு சூட்டிங் தொடர உள்ளதாக தெரிகிறது

புனிதமான திருக்கோவில்களை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுப்பாரா?

கோவில்களையும் அதன் புனிதத்தையும் கெடுக்கும் அறநிலையத் துறையே ஆலயத்தை விட்டு வெளியேறு!

  • கா.குற்றாலநாதன் (மாநிலச் செயலாளர், இந்து முன்னணி)

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version