- Ads -
Home புகார் பெட்டி பீக் அவர்ஸில் மணல் லாரி போக்குவரத்தை தடை செய்க!

பீக் அவர்ஸில் மணல் லாரி போக்குவரத்தை தடை செய்க!

காவல் துறையினர் கவனத்துக்கு!
சென்னை மாநகரக் காவல் ஆணையர் கவனத்துக்கு….
***
பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் அதிகம் புழங்கும் காலை நேரத்தில்,
செங்கல்பட்டு – தாம்பரம் நெடுஞ்சாலையில்
மணல் லாரிகள் அதிகம் செல்கின்றன.
லாரி ஓட்டுநர்கள் இடதுபுறமாக லாரியை மெதுவாக ஓட்டிச் செல்வதில்லை; தாறுமாறாக வலதும் இடதுமாக மாறி மாறி ஓட்டி, பின்னால் வருபவர்களுக்கு பெரும் இடைஞ்சலைத் தருகிறார்கள்.
பல நேரங்களில், பேருந்து நிறுத்தம் அல்லது, சாலையைக் கடப்பதற்காக இடதுபுறம் நின்று கொண்டிருக்கும் பயணிகள், மாணவ மாணவியரின் மீது மோதும் விதத்தில் அதிவேகமாக வருகிறார்கள்.

இந்த மணல் லாரிகள் முறையாக அனுமதி பெற்று அங்கு வருபவையா என்பது நமக்குத் தெரியாது!

தாம்பரம் வரைதான் இருக்கும், நகருக்குள் இந்த நிலை இருக்காது என்று நினைத்துப் பார்த்தால்… பல்லாவரம் – கிண்டி மார்கத்தில், சல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரிகள் சில ஓடிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

ஆக… நாம் வைக்கும் கோரிக்கை:
காலை 8 -11; மாலை 3-6 இந்த நேரத்தில், மணல் லாரிகள், ஜல்லி கல் ஏற்றி வரும் டிப்பர் லாரிகள் செங்கல்பட்டு – சென்னை வரை செல்வதற்கு தடை விதித்து கண்காணிக்க வேண்டும்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version