- Ads -
Home சமையல் புதிது சதுர்த்தி ஸ்பெஷல்: காரடையான் நோன்பு கொழுக்கட்டை!

சதுர்த்தி ஸ்பெஷல்: காரடையான் நோன்பு கொழுக்கட்டை!

Screenshot_2020_0817_172639

காரடையான் நோன்பு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், காராமணி. – கால் கப், பொடித்த வெல்லம். – முக்கால் கப், தேங்காய் துண்டுகள். – 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள். – அரை டீஸ்பூன், நெய். – அரை டீஸ்பூன், தண்ணீர். – 2 கப், உப்பு. – ஒரு சிட்டிகை.


செய்முறை: காராமணியை வெறும் கடாயில் வறுத்து வேகவிட்டு எடுக்கவும். அரிசி மாவை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து, மீண்டும் கொதிக்கவிடவும். இத்துடன் வேக வைத்த காராமணி, தேங்காய் துண்டுகள், உப்பு, ஏலக்காய்த் தூள், நெய் கலந்து… கொதிக்கும்போது அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் ஈர கையினால் கலவையை நன்கு பிசைந்து கலக்கவும். சிறிதளவு கலவை எடுத்து உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக உருட்டி அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள ஃப்ரெஷ் வெண்ணெய் ஒரு டீஸ்பூன் வைத்து பரிமாறவும்.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version