- Ads -
Home சமையல் புதிது வேர்க்கடலை சப்பாத்தி சாண்ட்விச்!

வேர்க்கடலை சப்பாத்தி சாண்ட்விச்!

peanut-sapathi

வேர்க்கடலை சப்பாத்தி சாண்ட்விச்

தேவையானவை:
கோதுமை மாவு. – 3 கப்,
தோல் நீக்கிய வேர்க்கடலை – ஒரு கப், காய்ந்த மிளகாய். – 4,
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – கால் கப், முந்திரிப்பருப்பு. – 6 (துண்டுகளாக்கவும்), எள். – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு. – தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், வேர்க்கடலை, முந்திரித் துண்டுகள் சேர்த்து, இறுதியாக எள்ளைப் போட்டு வறுத்து… உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து, மிக்ஸியில் கெட்டியான துவையலாக ரெடி செய்யவும் (நைஸாக அரைக்கக் கூடாது). கோதுமை மாவை நீர், உப்பு சேர்த்துப் பிசைந்து சப்பாத்திகளாக தேய்க்கவும். ஒரு சப்பாத்தியின் மேல் 2 டீஸ்பூன் வேர்க்கடலை கலவையை பரவலாக தடவவும். சப்பாத்தியின் ஓரங்களில் எண் ணெய் தடவி, மேலே ஒரு சப் பாத்தியை வைத்து, ஒரங்கள் பிரிந்துவிடாமல் மூடி, தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

இதற்கு தொட்டுக்கொள்ள ஆனியன் ராய்தா ஏற்றது.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version