Monthly Archives: April, 2018

அய்யாக்கண்ணு மெரீனாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை!

முன்னதாக, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதியின் உத்தாவுக்கு எதிராக மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. தமிழக அரசின் மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையை விதித்தது.

பாலிவுட் படங்களை சீனாவில் அதிகம் திரையிட அதிபர் ஜீ ஜின்பிங் ஆர்வம்!

இந்திய திரைப்படங்கள் அதிகமாக சீனாவிலும், சீனப் படங்கள் இந்தியாவிலும் திரையிடப்பட வேண்டும் என்பது தொடர்பான பேச்சு இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது இடம் பெற்றுள்ளதாக கோகலே கூறினார்.

ரஜினி நடிக்க வேண்டிய படத்தில் விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பதாக ஒப்புக்கொண்டு பின்னர் ஒருசில காரணங்களால் நடிக்க முடியாமல் போன...

மோடியின் சீன பயணம் நிறைவு! இதயங்களை வென்ற இந்தியா!

மோடியின் சாய் பர் சர்ச்சா என்ற நிகழ்ச்சி பிரபலமாக இருந்தது. டீ குடித்துக் கொண்டே, நாட்டு மக்களிடம் பிரச்னைகள் குறித்து விவாதிப்பது அந்த நிகழ்ச்சியின் நோக்கம். அது போல் சீனாவிலும் அதிபர் ஜீ ஜின்பிங்குடன் டீ குடித்துக் கொண்டே, பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இது தனக்கு இனிய அனுபவமாக இருந்தது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஓவியாவுக்கு பிறந்த நாள்!: ஸ்பெஷல் டிபி வைக்கணுமாம்!

அழகிய இதயம் படைத்த பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... இப்படிச் சொல்லியிருப்பவர் விஜய் சேதுபதி.

எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை இல்லை: சென்னை ஐகோர்ட்

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு...

கோவை குட்கா ஆலை குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: ராமதாஸ் கோரிக்கை!

தமிழகத்தில் 35 லட்சம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு சமூகத்தை சீரழிக்க துணை போனவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

மெரினாவில் போராட அய்யக்கண்ணுக்கு அனுமதி: தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மெரினாவில் போராட்டம் நடத்த தடை கோரி தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. 

இலவச அரிசி வேணுமா? இந்த சான்றிதழ் இருந்தா மட்டுமே இனி கிடைக்கும்..! : கிரண் பேடி போட்ட புது குண்டு!

புதுச்சேரி மண்ணடிப்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.

மெரினாவில் அய்யாக்கண்ணு போராட்டம்: ஒரு நாள் மட்டும் அனுமதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

90 நாட்களுக்கெல்லாம் அனுமதிக்க இயலாது என்று கூறி, ஒரு நாள் மட்டும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனறும், எழுத்துரிமை, பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிபதியை விமர்சித்த தங்க.தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி பதில்!

சென்னை: 11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தீர்ப்பை விமர்சித்த தங்க.தமிழ்ச் செல்வன் மீது நடவடிக்கை கோரி முறையிட்டதற்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று பதில் அளித்தார் நீதிபதி.

சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களை செல்போனில் ஆபாசப் படம் பிடித்து ‘ரசித்த’ மயிலாப்பூர் டாக்டர் கைது!

சென்னை மயிலாப்பூரில், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களை செல்போனில் ஆபாசமாகப் படம் எடுத்து வைத்துக் கொண்டு, பின்னர் ரசித்த டாக்டர் சிவகுருநாதன் போலீஸாரால் கைது செய்யப் பட்டார்.
Exit mobile version