- Ads -
Home கல்வி மாறுகிறது மாணவர்களின் சீருடை: பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு

மாறுகிறது மாணவர்களின் சீருடை: பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு

uniforms1சென்னை: பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப் பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி,  9, 10 மற்றும் 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டு முதல் புதிய வண்ணத்திலான சீருடையை அமல்படுத்த வேண்டும் . அடுத்து, 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அரசே விலையில்லாத சீருடைகளை வழங்கும் என்றும் பள்ளிகல்வித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிச் சீருடையில் தமிழகம் மாற்றம் செய்து ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதுகுறித்து தமிழக அரசுப் பள்ளிகளுக்கு தற்போது சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வருடத்துக்கு 2 செட் சீருடைகள் தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. light brown மற்றும் maroon கலரில் வழங்கப்படும் இந்தச் சீருடைகளை 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தங்கள் சொந்த செலவில் வாங்கிக்கொள்கின்றனர்.

இந்நிலையில், மாணவர்களுக்கான பள்ளிச் சீருடையில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, சாம்பல் நிறத்தில் பேன்ட்டும் இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல், 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கருநீல நிற வண்ணத்தில் முழுக்கால் சட்டையும் கருநீல நிற கோடிட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வரும் கல்வியாண்டு முதல் இந்தப் புதிய சீருடை முறை பின்பற்ற வேண்டும் என்றும் மாணவர்கள் தங்கள் சொந்த செலவில் ஆடைகளை வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version