- Ads -
Home வேலைவாய்ப்பு பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி!

பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி!

jobs

பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான ‘மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்’ (MDL) நிறுவனத்தில் காலியாக உள்ள Non-Executives பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 1501 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL)

மொத்த காலியிடங்கள் : 1501

பணி : Non-Executives (Skilled, Semi Skilled and Special Grade)

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற தொழில் நுட்ப கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்ட பிரிவில் trade சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பணியின் அடிப்படையில் டிப்ளமோ, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 18 முதல் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

மேலும், அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்க வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

Special Grade (IDA-VIII) – ரூ.21,000 முதல் ரூ.79,380 மாதம்
Skilled Gr-I (IDA-V) – ரூ.17,000 முதல் ரூ.64,360 மாதம்
Semi-Skilled Gr-III (IDA-IVA) – ரூ.16,000 முதல் ரூ.60,520 மாதம்
Semi-Skilled Gr-I (IDA-II) – ரூ.13,200 முதல் ரூ.49,910 மாதம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 08.02.2022 தேதிக்குள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் mazagondock.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version