- Ads -
Home வேலைவாய்ப்பு மதுரையில் வேலைவாய்ப்பு முகாம்!

மதுரையில் வேலைவாய்ப்பு முகாம்!

ANM, DFPN, DNA, DMLT மற்றும் DPhram படித்தவர்கள் நேரில் வந்து அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்புக்கு கொண்டு வர வேண்டும்

eimployment

மதுரை: மதுரையில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம்
மார்ச் 6 ம் தேதி நடைபெற உள்ளது.

மதுரையில், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான பயிற்சி பெற்ற ( மருத்துவ உதவியாளர்) சுகாதார தனி நபருக்கான வேலை வாய்ப்பு முகாம் (ஓட்டுநர்களுக்கு பொருந்தாது) , மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆடிட்டோரியம் கட்டிடத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இதில், தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 12 மணி நேரம் பகல் இரவு என இரண்டு ஷிப்ட்களில் பணி அமர்த்தப் படுவார்கள், இப்பணிக்கு 25 வயதுக்கு மேலு‌ம் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ. மீ இருக்க வேண்டும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் இருக்க வேண்டும்.

இலகுரக ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், இதற்கு மாத ஊதியமாக 14966 மற்றும் இதர படிகள் கல்வித் தகுதியாக Bsc DGNM, Bsc Physics, Chemistry, Biology, Zoology, Bio chemistry, Micro Biology, Bio Technology பட்டம் பெற்றவர்கள், பிளஸ் – 2 தேர்ச்சிக்குப்பிறகு 2 ஆண்டுகள் கொண்ட ANM, DFPN, DNA, DMLT மற்றும் DPhram படித்தவர்கள் நேரில் வந்து அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட 108 மேலாளர் விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version