- Ads -
Home வேலைவாய்ப்பு இன்ஜினியரிங்ஙா..? ரூ 56,100 முதல் 2,05,700 லட்சம் வரை ஊதியம்!

இன்ஜினியரிங்ஙா..? ரூ 56,100 முதல் 2,05,700 லட்சம் வரை ஊதியம்!

tnpsc

அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள உள்ள பணியிடங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக போட்டித் தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு நகர மற்றும் மாநில திட்டமிடல் சேவை பிரிவில் நகர திட்டமிடல் உதவி இயக்குனர் பணியிடத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு இளங்கலை சிவில் படிப்பில் பொறியியல் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது இளங்கலை நெடுஞ்சாலை பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நகர திட்டமிடல் பிரிவில் முதுகலை படிப்பில் தேர்ச்சி அடைந்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்க 01/07/2022 அன்றைய நிலவரப்படி 32 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

இதில் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM, விதவைகள் போன்றோருக்கு வயது வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இதில் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் சம்பளமாக ரூபாய் 56,100 முதல் 2,05,700 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்க http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in &nbsp என்ற இணையதளத்திற்கு சென்று வரும் மார்ச் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும்.

இது தொடர்பான கூடுதல் விபரங்களை பெற https://www.tnpsc.gov.in/Document/english/2022_04_AD_Town%20and%20Country%20Planning_Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version