- Ads -
Home வேலைவாய்ப்பு பிஇசிஐஎல்: பல்வேறு பணிகள்! இன்றே கடைசி!

பிஇசிஐஎல்: பல்வேறு பணிகள்! இன்றே கடைசி!

jobs

இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒளிபரப்பு இன்ஜினியரிங் கன்சல்டன்ட் இந்தியா நிறுவனத்தில் (பிஇசிஐஎல்) ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்ப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Medical
காலியிடங்கள்:
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,550
தகுதி: மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நிமிடத்திற்கு 30 முதல் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யவும், கணினியில் அறிவுத் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant/Technician
காலியிடங்கள்: 41
வயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.33,450
தகுதி: டெக்னீசியன் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்து 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Attendant Gr-II
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் டிஎம்எல்டி மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Cashier
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.24,550
தகுதி: வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவமும், கணினிப் பிரிவில் நல்ல அறிவுத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Radiographic Technician Grade-I
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.33,450
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Mechanic (A/C & R)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.23.550
வயதுவரம்பு: 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.750. எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகளிகள் பிரிவினர் ரூ.450 கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.04.2022

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version