- Ads -
Home உரத்த சிந்தனை ஆன்மிக அரசியலின் அடிப்படை!

ஆன்மிக அரசியலின் அடிப்படை!

ஆன்மிக அரசியலுக்கு அடிப்படை நமது சனாதன தர்மம்.

இதில் கீழ்காணும் ஐந்து அம்சங்கள் முக்கியமானவை.

அதர்மம் அழித்து தர்மம் நிலைநாட்ட ஆயுதம் எடுத்தல் தகும். இதுவே கீதை அறிவுறுத்திய பாடம்; காந்தி காட்டிய அஹிம்சை நமக்கு உதவாது. பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும்.

ஜீவகாருண்யம் நமது தர்மத்தின் அடிப்படைகளில் ஒன்று. பசுத்தாய், கால்நடைச் செல்வங்கள் காப்பாற்றப்பட வேண்டும். தாயாகப் பாவிக்கப்படும் பசுவை வதை செய்வது தடை செய்யப்பட வேண்டும்.

ஆலயங்கள் நமது கலாச்சாரச் சின்னங்கள். கலைகளை வளர்க்கும் இடங்கள். வெறும் வியாபாரத் தலங்களாக ஆக்கப்பட்டுள்ள அவற்றை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து ஹிந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.

அன்னிய மத அமைப்புகளின் செயல்பாடுகள் புற்றுநோய் போல் பெருகி வருகின்றன. மதமாற்றங்கள் தேசத்தின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதிக்கின்றன. மதமாற்றம் தடை செய்யப்பட வேண்டும்.

தேசத்தைத் தெய்வமாகக் காணும் பண்பாடு நமது. தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டவர்கள் நமது முன்னோர்கள். இவை இரண்டுக்கும் கருத்துச் சுதந்திரம், கலைச் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்கிற பெயரில் தேச விரோதச் செயல்கள் பெருகி வருகின்றன. அச்செயல்களில் ஈடுபடும் தேச விரோத அமைப்புகளும், அவைகளின் நிதி ஆதாரங்களும் செயலிழக்கச் செய்யப்பட வேண்டும்.

அன்புள்ள ரஜினிகாந்த் இந்த ஐந்து அம்சங்களில் கவனம் செலுத்துவார் என்று நம்புவோம்.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version