― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 16): ஒட்டகமும் கம்பும்

ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (பகுதி 16): ஒட்டகமும் கம்பும்

- Advertisement -
samskrita nyaya

ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் –பகுதி-16   

தெலுங்கில்: பி,எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

‘உஷ்ட்ர லகுட நியாய:’ – ஒட்டகமும் கம்பும்
(உஷ்ட்ர – ஒட்டகம் , லகுடம் –கம்பு, கழி, கட்டை)

ஒரு வியாபாரி தன் ஒட்டகத்தின் முதுகில் பல பொருட்களோடு தானும் அமர்ந்து  பயணம் செய்தான். அவற்றுள் ஒரு மரக்கட்டைகளின் மூட்டையும் இருந்தது.

அவ்வப்போது அந்த மூட்டையில் இருந்து ஒரு கம்பை எடுத்து ஒட்டகத்தை அடித்து தண்டித்துக் கொண்டிருந்தான். அவ்வாறு மூட்டை சுமந்ததோடு அடியும் வாங்கி வந்தது அந்த ஒட்டகம். இதுதான் ஒட்டகமும் கம்பும் என்ற நியாயம்.

பழைய தலைமுறையினருக்கு தம் சிறுவயதில் நடந்த சம்பவம் நினைவில் இருக்கும். வகுப்பில் குறும்பு செய்யும் மாணவனை ஆசிரியர் எழுப்பி ஸ்டாப் ரூமில் இருக்கும் கம்பை எடுத்து வரச்சொல்வார். அவ்வாறு எடுத்து வந்த மாணவனை அதே கம்பால் அடிப்பார். இதனை ஒட்டகம் -கம்பு நியாயத்திற்கு உதாரணமாகக் கூறலாம்.

அண்மைக் காலமாக தொலைகாட்சி சேனல்களில் நடக்கும் விவாத மேடை நிகழ்ச்சிகளில் இந்த நியாயத்தை நினைவுபடுத்தும் சம்பவங்கள் நடப்பதை பார்க்கிறோம். மிகவும் அனுபவம் உள்ள பேச்சாளர்கள் கூட ஒரோருமுறை ஆவேசமாக ‘செல்ப் கோல்’ வாங்குவார்கள். இந்த விவாதங்களில் சொல்லக்கூடாத சொல் ஒன்றை ஒருவர் தவறுதலாக கூறி விடுவார். எதிர்க்கட்சிக்காரர் விவாத விஷயத்தை புறக்கணித்து விட்டு அந்த தவறான சொல்லைப் பிடித்துக் கொண்டு விவாதத்தை திசை திருப்பி விடுவார். இது ஒட்டகம் கம்பு நியாயத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. (ஒவைசி-சாயி தீபக் இடைய நடந்த வி(தண்டா)வாதம் இது போன்றதே.)

இன்னுமொரு எடுத்துக்காட்டு:-

இங்கு உஷ்ட்ரம் என்றால் வேறு ஏதோ அல்ல. உஷ்ட்ரம் என்றால் ஹிந்துக்கள் என்று எடுத்துக் கொள்வோம்.

ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருக்கும் வியாபாரி அரசியல்வாதி என்று எடுத்துக் கொள்வோம். ஒட்டகம் சுமக்கும் கட்டைகளின் மூட்டை அரசியல் சாசனத்தின் சில சட்டங்கள்.

(திரு எம் நாகேஸ்வர ராவு (சிபிஐ முன்னாள் இன்சார்ஜ் டைரக்டர்) அண்மையில் எழுதிய “ஹிந்துக்களுக்கு அநியாயம் செய்யும் அரசியல் சாசன சட்டங்கள்” என்ற கட்டுரை இந்த ஒப்பீடலுக்கு ஆதாரம்).

ஒட்டகத்திற்கு (ஹிந்துக்களுக்கு) அடி கொடுக்கும் தடிகள் எண் 25 முதல் எண் 30 வரை உள்ள ஆர்டிகில்கள். எமர்ஜென்சி சமயத்தில் மேலும் ஒரு வலுவான கழி ஒட்டகத்தில் முதுகில் ஏற்றப்பட்டது. அதுதான் செக்யூலரிசம் என்ற உருட்டுக் கட்டை. இன்றுள்ள சூழலை பாரபட்சமின்றி சிந்தித்தால் இந்த ஒப்பீடு புரியும்.

இந்த ஹிந்து எதிர்ப்பு எண்ணுள்ள ஆர்டிகிள்களை உபயோகிப்பது யார்? சிறிதும் தேசபக்தி  இல்லாதவர்கள்… அரசியல் கட்சிகளின் தலைவர்கள். இது ஒரு பாரடாக்ஸ்.

பாரத தேசம் ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள நாடு. ஆனால் விந்தையான விஷயம் என்னவென்றால் ஹிந்துக்கள் நம் தேசத்தில் அதிக உரிமைகளைக் கேட்பதில்லை. “மைனாரிடிகளுக்கு அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளை  எங்களுக்கும் கொடுங்கள். அதுவே எங்களுக்குப் போகும்” என்றுதான் கேட்கிறார்கள். ஹிந்துத்துவமே பாரத தேசத்தின் ஆத்மா. அப்படிப்பட்ட ஆத்மாவுக்கு தீங்கு விளைவித்து, ஹிந்து ஒட்டகத்தை அடித்து நொறுக்கும் அரசியல் சட்டங்களே சொந்த தேசத்தில் இரண்டாம் வகுப்பு குடிமகனாக வாழும்படி செய்துள்ளது…. நம் முதுகில் சுமத்திய கட்டைகளின் மூட்டை.

அரசியல் சட்டத்தின் தலையீடு இல்லாமல் ஹிந்து கல்விநியங்களை நடத்துவதற்கு உரிமை இல்லை. ஆனால் மைனாரிடிகளுக்கு இந்த உரிமை அளித்ததால் மதம் மாற்றும் தொழிரற்சாலை செழிப்பாக வளர்ந்து வருகிறது. இது ஹிந்து ஒட்டகத்தின் மேல் வைத்த அரசியல் சட்டதின் ஆர்டிகிள் முப்பது என்ற உருட்டுக் கட்டை.

மைனாரிடிகளுக்கு அவர்களின் மதம், கலாசாரத்தை போதித்துக்கொள்வதற்கு பிரத்தியேக உரிமைகள் உள்ளன. ஆனால் ஹிந்துக்களுக்கு சரஸ்வதி மாதா பிரார்த்தனை பாடினாலும் ‘அசதோமா ஸத்கமயா…’ சொன்னாலும் யோகா கற்றுத் தந்தாலும் இந்த ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருக்கும் பாகன் பொறுத்துக் கொள்ள மாட்டன். செக்யூலரிசம் என்ற வஜ்ராயுதத்தை பிரயோகிப்பான்.

(நித்திய) மைனாரிட்டி அமைப்புகளுக்கு அளித்த ஆர்டிகிள் -30, 93ம் அரசியல் சட்டத் திருத்தம், ஆர்டிகிள் 29 (மொழி, எழுத்துரு- கலாசாரக் கல்வி உரிமைகள்), ஆர்டிகிள் 28… இவை அனைத்தும் ஹிந்துக்களை அடித்துப் புரட்டும் உருட்டுக் கட்டைகள்.

பப்ளிக் எஜுகேஷன் மூலம் பழங்கால நாகரிக நூல்களைப் பற்றிய அறிமுகத்தை கல்விப்  பாடங்களின் மூலம் போதிக்கும் அதிகாரம் ஹிந்துக்களுக்கு இல்லை. (NCERT பாடத்திட்டத்தில் விவேகாந்தர் பற்றிய பாடம் வைக்கும்படி தொடர்புடைய அதிகாரிகளுக்கு காதில் வீடு கட்டி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் ராமகிருஷ்ணா மிஷின சாதுக்கள். ஆனாலும் வேலை நடப்பதில்லை).

சர்ச்சு, மசூதிகளின் ஆதாயங்களில் கைவைக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. ஆனால் ஹிந்து மடங்கள், கோவில்களின் ஆதாயம் அம்ற்றும் அவற்றின் நிலையான சொத்துகளை அபகரித்து (ஆமாம்) பிற மதத்தவர்களுக்கு விநியோகிப்பதும் செக்யூலர் வேலைகளுக்கு செலவழிப்பதும் செய்கிறார்கள்.

நாம் பக்தியோடு உண்டியலில் செலுத்தும் சில்லறைகளை வெட்கமின்றி தர்ம விரோத காரியங்களுக்கு செலவழித்து, இவ்வாறு நம் மதத்தை அழிக்க நினைப்பது கூட ‘உஷ்ட்ர லகுட நியாயமே!’. தெய்வ தரிசனத்திற்க்கு டிக்கெட்டுகளின் விலையை அதிகரிப்பதும் அரசாங்கமே.

தீபாவளி, விநாயக சதுர்த்தி, ஹோலி பண்டிகைகளின் மீது கட்டு திட்டங்ககளையும்  விமரிசனங்களையும் குவிக்கும் சட்டம், கோடிக்கணக்கான பசு மாடுகளையும் பசுங் கன்றுகளையும் வதைக்கும் பக்ரீத்து பண்டிகை பற்றி வாயைத் திறக்காது. ஹிந்து ஒரு கோழிக் குஞ்சை பலி கொடுத்து விட்டால் அது ஹிம்சை… அதற்கு ஏகப்பட்ட கூச்சல்.

விலங்குகளின் மேல் கொடுமை (ஆர்டிகிள் நாற்பத்தெட்டு) அமலில் உள்ள தவறு காரணமாக நம் தேசம் மிகப் பெரும் மாமச ஏற்றுமதி தேசமாக மாறியுள்ளது. ஆண்டுக்கு மூன்றிலிருந்து நான்கு கோடி பசு மாடுகள் வதைக்கப்பட்டாலும் அது மைனாரிட்டி உரிமையாக கணக்கிடப்படுகிறது.

அத்தனை ஏன்.. கோவிலில் மைக்கில் சுப்ரபாதம் பாடினால் ஒலி மாசு. மசூதிகளின் அருகில் வசிக்கும் ஹிந்துக்களின் காதுகள் படும் தொல்லை வர்ணனைக்கு எட்டாதது.

இப்படி எத்தனையோ ,,, ஒட்டகத்தின் மேல் கட்டைப் பிரயோகம். ‘உஷ்ட்ர-லகுட ‘(அ)நியாயங்கள். இவற்றுக்கு தீர்வு என்ன என்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version