- Ads -
Home சமையல் புதிது ஆரோக்கிய சமையல்: மிளகு ரொட்டி!

ஆரோக்கிய சமையல்: மிளகு ரொட்டி!

peper rodhi - 2026

மிளகு ரொட்டி

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்

மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும்.

2 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்துகொள்ளவும். பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும்.

சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
இந்த மிளகு ரொட்டியை இரவு நேர உணவாக உட்கொள்ளும்போது எளிதில் ஜீரணமாகும். வெளியூருக்குப் பயணம் செய்யும்போது, மிளகு ரொட்டியின் நடுவில் சிறிதளவு ஊறுகாயைத் தடவி ரோல் போன்று செய்து ‘பேக்’ செய்து கொள்ளலாம்.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version