காஜு – கோகனட் பொடி
தேவையானவை:
உடைத்த முந்திரி – 50 கிராம்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8
பெருங்காயம் – ஒரு சிறுகட்டி.
செய்முறை:
முந்திரி, துருவிய கொப்பரை/தேங்காய்த் துருவலைத் தனித்தனியே சிவக்க வறுக்கவும் (எண்ணெய் விட வேண்டாம்).
கடாயில் எண்ணெய்விட்டு, வறுக்கக் கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்து ஆறவிட்டு, முந்திரி, துருவிய கொப்பரை/ தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.