- Ads -
Home இந்தியா தெரு நாய்களால்… பறிபோன விவசாயியின் வாழ்வாதாரம்!

தெரு நாய்களால்… பறிபோன விவசாயியின் வாழ்வாதாரம்!

goats died

கும்பல் கும்பலாக இறந்த ஆடுகள்… வீதி நாய்கள் கொன்றிருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?

வளர்ப்பு ஆடுகள். அவைதான் அவருக்கு வாழ்வாதாரம். ஆனால் தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் காவல் காக்காமல் விட்டதால், எதிர்பாராத விதமாக அவை மரணத்தின் வாயில் விழுந்தன.

தெலங்காணா மாநிலம் கொமரம் பீம் அசிபாபாத் மாவட்டம் திர்யாணி மண்டலம் ரொம்பல்லி பஞ்சாயத்து எல்லையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. ‘கெர்வேத’ துகாராம் என்பவரின் ஆட்டுமந்தை மேல் ஞாயிறன்று மாலை தெருநாய்கள் தாக்குதல் நடத்தின. அதில் 26 ஆடுகள் உடனுக்குடன் இறந்தன.

ஞாயிறு காலையில் ஆட்டு மந்தையை காட்டிற்குச் சென்று மேய்ந்து விட்டு மாலையில் கிராமத்தின் அருகில் உள்ள புல்வெளியில் அவிழ்த்து விட்டார்.

தீபாவளியானதால் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 8 மணி அளவில் ஆட்டுமந்தை அருகில் சென்றபோது தெருநாய்கள் அவற்றை தாக்குவதை கண்டார். அவற்றை துரத்தி விட்டு பார்த்தால் இருபத்தாறு ஆடுகள் அங்கேயே இறந்து கிடந்தன.

தீபாவளி அன்று நடந்த இந்த சம்பவம் கிராமத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version