- Ads -
Home இந்தியா முதல் பிரசவத்துக்கு ரூ.6 ஆயிரம்: மத்திய அரசின் பெண்கள் நலத்திட்ட உதவி

முதல் பிரசவத்துக்கு ரூ.6 ஆயிரம்: மத்திய அரசின் பெண்கள் நலத்திட்ட உதவி

modi n

முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு, பெண்கள் நலத்திட்ட உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் வழங்கப்படும் இந்த தொகை நேரடியாக வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். மேலும், மகப்பேறு பதிவு செய்யப்பட்டவுடன் முதல் தவணையாக 1000 ரூபாயும், 6-வது மாதத்தில் அடுத்த தவணையாக 2000 ஆயிரம் ரூபாயும், குழந்தை பிறந்தவுடன் 3-வது தவணையாக 3000 ரூபாயும் வழங்கப்படும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், அசாமில் இந்திய வேளாண் கழகம் அமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 587 ஏக்கர் நிலம் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version