- Ads -
Home இந்தியா மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்: அரசு முறை துக்கம் அனுசரிப்பு

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்: அரசு முறை துக்கம் அனுசரிப்பு

anil madhav dave

புது தில்லி:

மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் அணில் மாதவ் தவே இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அனில் மாதவ் தவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மோடி அமைச்சரவையில் இடம் பெற்றார். பதவியேற்று 1 ஆண்டு கூட நிறைவடையவில்லை. 60வது வயதில் உடல் நலக்குறைவினால் மரணமடைந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பெரும் பங்காற்றியவர். உடல் நலக் குறைவினால் சிகிக்சை பெற்று வந்த போதும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று ஆர்வமுடன் செயல்பட்டவர் அமைச்சர் தவே.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அனில் மாதவ் தவே உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் தொடர்பாக நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்களில் பணியாற்றியுள்ளார் அனில் மாதவ் தவே. எம்காம் பட்டதாரியான இவர் ஆஸ்பெஸ்டாஸ் கூரை இல்லாத நகரத்தை உருவாக்க வேண்டும் என்று பாடுபட்டவர்.

அனில் மாதவ் தவே உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்.

மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே இன்று காலமானார். உடல் நலக்கோளாறு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அனில் மாதவ் தவே உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தவேயின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொன். இராதாகிருஷ்ணன் இரங்கல்
மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தேசப் பணிக்காக தன் குடும்பத்தை விட்டு முழு ஈடுபாடுடன் பணியாற்றியவர். முழுமையான அர்ப்பணிப்பு, சிறந்த சிந்தனை, பிரச்சனையை எளிதில் புரிந்து கொண்டு தீர்வு காணுதல் ஆகியவை அவரது சிறப்பு இயல்பு. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது ஒரே நாளில் 3 முறை அவரை சந்தித்திருந்தேன். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடந்திட தனது முழு ஆதரவையும் வழங்கி, இவ்வாண்டு ஜல்லிக்கட்டு நடைபெற தமிழர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். அவரின் இழப்பு பேரதிர்ச்சியை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது சார்பாகவும், நம் தமிழ் சொந்தங்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் புண்ணிய ஆன்மா நற்கதியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

இந்நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் தேசிய துக்கம் அனுசரிக்கப் படுகிறது. தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அவரது இறுதிச் சடங்கு முடியும் வரையிலும் நாடு முழுதும் அனைத்து அலுவலகங்கள், கட்டடங்கள் அனைத்திலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version