- Ads -
Home இந்தியா எஸ்பிஐ வங்கி சேவையின் 10 கட்டுப்பாடுகள் என்னென்ன?

எஸ்பிஐ வங்கி சேவையின் 10 கட்டுப்பாடுகள் என்னென்ன?

SBI bank atm

புது தில்லி:

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள புதிய சேவைக் கட்டுப்பாடுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவைகள் குறித்த குழப்பங்கள் பல நிலவி வரும் நிலையில், எஸ்பிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ., சேவையில் எதற்கெல்லாம் கட்டணம் :

1. ‘எஸ்பிஐ பேங்க் பட்டி’ (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

2. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.3. இதில் மெட்ரோ நகரங்களில் வசிப்போர் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்.,களிலும்

3 முறை மற்ற வங்கி ஏடிஎம்.,களிலும் பணம் எடுக்கலாம். மெட்ரோ நகரங்களில் இல்லாதவர்கள் மாதம் 10 முறை வரை சேவை கட்டணம் இல்லாமல் ஏடிஎம்.,ல் பணம் எடுக்கலாம்.

4. அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை மட்டும் ஏடிஎம்.,ல் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம் என்ற வரைமுறை பொருந்தும்.

5. ஏழ்மை நிலையில் இருப்போர் வங்கிக் கணக்கில் அதிகம் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 4 முறை மட்டுமே பணம் எடுக்கமுடியும் என்ற வரையறை வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இவர்களிடம் இருந்து ஆண்டு பராமரிப்பு தொகை பிடித்தம் செய்யப்படுவதில்லை.

6. ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி, ஐஎம்பிஎஸ் வழியாக ஆன்லைனின் பணம் பரிமாற்றம் செய்பவர்கள், ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்தால் ரூ.5 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணபரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.15 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.25 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

7. அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டு பரிமாற்றம் : 20 க்கும் மேற்பட்ட அழுக்கு அல்லது கிழிந்த நோட்டுக்களையோ வாடிக்கையாளர் மாற்றினால்அவர்களிடம் ரூ.2 உடன் சேவை கட்டணம் ஒவ்வொரு நோட்டுக்கும் வசூலிக்கப்படும். ரூ.5000 க்கும் மேலான மதிப்புடைய அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.

8. அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 10 செக் தாள்கள் கொண்ட புக்கிற்கு ரூ.30 உடன் சேவை வரியும், 25 செக் தாள்கள் கொண்ட புக்கிற்கு ரூ.75 உடன் சேவை வரியும், 50 செக் தாள்கள் கொண்ட செக் புக்கிற்கு ரூ.150 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

9. ஏடிஎம்., கார்டுகளுக்கு கட்டணம் : ஜூன் 1 ம் தேதியிலிருந்து புதிய டெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே கிளாசிக் கார்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.

10. பணம் எடுப்பதற்கான கட்டணம் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கியில் ரூ.50 உடன் சேவை வரியும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்.,களில் பணம் எடுத்தால் ரூ.20 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version