- Ads -
Home இந்தியா சீன ஆப்களை டெலிட் செய்யுங்க… பிரசாரத்துக்குக் கிடைத்த வெற்றி! ப்ளே-ஸ்டோரில் 10 லட்சம் டவுன்லோட்ஸ்!

சீன ஆப்களை டெலிட் செய்யுங்க… பிரசாரத்துக்குக் கிடைத்த வெற்றி! ப்ளே-ஸ்டோரில் 10 லட்சம் டவுன்லோட்ஸ்!

remove china apps feat
remove china apps feat
  • ரிமூவ் சைனா ஆப்ஸ் – என்ற பிரசாரம் கடந்த மே 17ம் தேதி தொடங்கப் பட்டது.
  • இது ஆண்ட்ராய்ட் தளத்துக்காக வடிவமைக்கப் பட்டது
  • ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் ஒருவரால் உருவாக்கப்பட்டது
  • 1 மில்லியன் டவுன்லோட் கடந்து சாதனை

இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே மூண்டுள்ள அரசியல் ரீதியான பதற்றத்தின் இடையே, சீனாவை பொருளாதார ரீதியாக தோல்வியடையச் செய்ய முன்வாருங்கள் என்று கூறி, ரீமூவ் சைனா ஆப் என்ற பிரசாரம் இணையதளங்களில் வைரலானது. இது இப்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களின் வழியே மேலும் பலரை இந்தத் தளங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

3 Idiots படத்தின், கதாபாத்திரம்- புன்ஷுக் வங்க்டு. இவரை மனதில் வைத்தே அமீர் கான் அந்தக் கேரக்டரில் நடித்துப் புகழடைந்தார். லடாக் பகுதியைச் சேர்ந்த பொறியியல் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர். இவர் துவக்கிய பிரசாரத்தால் பலரும் இவரைப் பின் தொடர்ந்து அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

இந்தியா தனது பகுதியான லடாக் பிரதேச எல்லையில் கடந்த வாரம் சாலைப் பணிகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில் சீனா, தனது பகுதியில் இந்தியா அத்துமீறுவதாகக் கூறி கண்டித்து வந்தது. மேலும், மோதலுக்கு தயாராகும் வகையில் படை வீரர்களைக் குவித்து வந்தது.

இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த இந்தியா, லடாக் எல்லையில் இந்திய வீரர்களையும் பதிலுக்குக் குவித்து வந்தது

இந்நிலையில், சீனாவின் அடாவடி செயல்களைக் கண்டிக்கும் விதத்தில், சீனாவின் பொருளாதாரத்தை நசுக்க இனி சீனப் பொருள்களை வாங்க வேண்டாம். பயன்படுத்திக் கொண்டிருப்பதிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவோம், டிக் டாக் செயலி உட்பட என கூறி இந்த பிரசாரத்தின் பக்கம் மக்களைத் திருப்பினார் புன்ஷுக் வங்க்டு.

remove china app

சீன மென்பொருளை அடுத்த ஒரு வாரத்திலும், சீன ஹார்டுவேர் – வன்பொருள்களை பயன்படுத்தி வந்தால் அதிலிருந்து ஒரு வருட காலத்திற்குள்ளும் விட்டு விடுதலை ஆகுங்கள் என அறைகூவல் விடுக்கிறார் இந்த நபர்.

சீனா ஒவ்வோர் ஆண்டும் 5 லட்சம் கோடி அளவிற்கு இந்தியாவில் தனது பொருள்களின் விற்பனை மூலம் லாபம் அடைகிறது. அப்படி இருந்தும் தொடர்ந்து நம் எல்லையில் அட்டூழியம் செய்து வருவதை இனியும் பொறுக்க முடியாது. அதற்கு நாம் சீனாவுக்கு பொருளாதார ரீதியாக பதிலடி தருவோம். அடுத்த வாரத்திலிருந்து எனது சீனத் தயாரிப்பு மொபைலை தூக்கி எறியப் போகிறேன். இனி படிப்படியாக அனைத்து சீனப் பொருள்களைப் பயன்படுத்துவதில் இருந்து விடுபடுவேன் என்கிறார் வங்க்டு.

sonam wangchuk

சீனா தொடர்ந்து லடாக்கிலும், பிற எல்லையிலும் அத்துமீறுவதைத் தடுத்திட Made in China பொருட்களை முற்றிலும் விலக்குவோம். 130 கோடி இந்தியர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் இந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டால் சீனாவில் கட்டுண்டு கிடக்கும் 1.4 பில்லியன் கொத்தடிமை தொழிலாளர்களையும், 6 மில்லியன் திபெத்தியர்களையும் தானாகவே மீட்கலாம். நமது நாட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்தே சீனா, தனது ராணுவ தளவாடங்களைக் கட்டமைக்கிறது. நமது “wallet Power” மூலம் சீனாவிற்கு நாம் யார் என்பதை உணர்த்துவோம் என முழங்கி வருகிறார் வங்க்டு.

இதை அடுத்து, இந்தி சினிமா உலகைச் சேர்ந்த மிலிந்த் சோமன் உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

milind soman

இந்நிலையில், இந்த பிரசாரம், சமூகத் தளங்களில் வைரலாகி, குறிப்பிட்ட ஆப், 10 லட்சத்துக்கும் அதிகமான முறை டவுன்லோட் ஆகியுள்ளது. ப்ளேஸ்டோரில் இருந்து!

படிப்படியாக சீனப் பொருள்களை யன்படுத்துவதை தவிர்ப்போம். சீனப் பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்போம் என்ற முழக்கத்துடன் இந்த லிங் உலா வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version