- Ads -
Home இந்தியா கொரோனா: நடு சாலையில் நான்கு மணி நேரம் கிடந்த சடலம்! பெங்களூர் அவலம்!

கொரோனா: நடு சாலையில் நான்கு மணி நேரம் கிடந்த சடலம்! பெங்களூர் அவலம்!

கர்நாடகாவில் பெங்களூரில் கொரோனாவால் உயிரிழந்த நபர் ஒருவரின் உடல் நடு சாலையில் மூன்று மணி நேரம் கிடந்த அவலம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் தீவிரமாக அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வேகத்தில் அங்கு கொரோனா கேஸ்கள் அதிகமாகி வருகிறது.

பெங்களூரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 994 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளது .

அங்கு இருக்கும் ஹனுமான் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 64 வயது நபர் ஒருவர் ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார். ஆம்புலன்ஸ் உதவி எங்கள் வீடு முன் ஆம்புலன்ஸை நிறுத்த வேண்டாம். அப்படி நிறுத்தினால் பக்கத்து வீட்டில் எல்லோரும் பயப்படுவார்கள்.

அதனால் வீட்டிற்கு வெளியே சாலையில் சந்திப்பில் ஆம்புலன்ஸை நிறுத்துங்கள், நான் வந்து ஏறிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் சாலையில் வரப்போகும் ஆம்புலன்சில் ஏறுவதற்காக அந்த 64 வயது நபர் சாலையை நோக்கி சென்றுள்ளார்.

hanuman nagar

ஆனால் செல்லும் வழியிலேயே சாலையிலேயே அவர் மயங்கி விழுந்தார். இந்த நிலையில் ஆம்புலன்சுக்காக காத்து இருந்த அவர் சாலையிலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அதோடு அவரின் உடல் அந்த சாலையிலேயே 4 மணி நேரம் தூக்க ஆள் இல்லாமல் கிடந்தது.

ஆம்புலன்ஸ் அங்கு வந்து அவரின் உடலை எடுத்து செல்ல 4 மணி நேரம் ஆகி உள்ளது. கர்நாடகாவில் அந்த உடல் கேட்பாரின்றி கிடந்தது உள்ளது.

இந்த சம்பவம் பெங்களூரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் மாநகராட்சிக்கு எதிராக இதனால் பலரும் குரல் எழுப்ப தொடங்கி உள்ளனர்.

பெங்களூரில் மாநகராட்சி ஆணையர் அணில் குமார் இது தொடர்பாக கண்டிப்பாக விசாரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version