- Ads -
Home இந்தியா கொரோனா: பிரதமரின் சிறிய தாயார் உயிரிழப்பு!

கொரோனா: பிரதமரின் சிறிய தாயார் உயிரிழப்பு!

corono

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் சித்தி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

modi

மோடியின் சித்தி நர்மதாபென் மோடி. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நர்மதாபென் (80) தனது குழந்தைகளுடன் நகரின் புதிய ரனிப் பகுதியில் வசித்து வந்தார்.

அவரது உடல் நலன் மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சையில் இருந்தார். ஆனால் தொடர்ந்து அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் உயிர் பிரிந்தது.

பிரதமரின் தந்தை தாமோதர்தாஸின் சகோதரர் அவரது கணவர் ஜக்ஜீவந்தாஸ். பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனை மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி உறுதி செய்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version