- Ads -
Home இந்தியா நல்லாட்சி நடத்த மம்முட்டி படத்தை பாருங்கள்! முதல்வருக்கு அட்வைஸ் கொடுத்த அமைச்சர்!

நல்லாட்சி நடத்த மம்முட்டி படத்தை பாருங்கள்! முதல்வருக்கு அட்வைஸ் கொடுத்த அமைச்சர்!

mamukka
mamukka

மலையாளத்தில் கடந்த மாதம் மம்முட்டி நடித்த ‘1’ என்கிற படம் வெளியானது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில், கடக்கல் சந்திரன் என்கிற பெயரில், கேரள முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மம்முட்டி.

ஒரு நேர்மையான, மக்களுக்கான முதல்வர் எப்படி இருக்கவேண்டும் என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது. ஆனாலும் இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

jegan

இந்தநிலையில், சமீபத்தில் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கணுமுறு ரகுராம கிருஷ்ண ராஜூ என்பவர் இந்தப்படத்தை பார்த்துள்ளார்.

இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கட்டாயம் இந்தப்படத்தை பார்க்க வேண்டும்.

Kanumuru Raghurama Krishna Raju

ஒரு சிறந்த முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப்படம் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்” என கூறி அதிர வைத்துள்ளார். ஆந்திர மாநில முதல்வராக உள்ள ஒய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டியை, எப்படி ஆட்சி செய்யவேண்டும் என, ஒரு திரைப்படத்தை பார்க்கும்படி, அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்.பியே அட்வைஸ் செய்துள்ளது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்.பி கணுமுறு ரகுராம கிருஷ்ண ராஜூ, கடந்த சில மாதங்களாகவே முதல்வர் ஜெகன்மோகன் பற்றியும் கட்சி பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version