- Ads -
Home இந்தியா பிரதமர் பற்றிய பொய் தகவலை பரப்பி சிக்கலில் மாட்டிய பிரபலங்கள்!

பிரதமர் பற்றிய பொய் தகவலை பரப்பி சிக்கலில் மாட்டிய பிரபலங்கள்!

modi

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிகையில், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து செய்தி, படம் வெளியானதாக சமூக வலைதளத்தில், காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் பகிர்ந்தனர். ஆனால், அது பொய் செய்தி என்பது தெரியவந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், சுகாதாரப் பணியாளர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உரையாற்றினார். கொரோனா பரவல் காலத்தில் அவர்களுடைய சிறப்பான சேவையை பாராட்டி அவர் பேசினார். அப்போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார்.

thik vijay singh

மோடி, முதலைக் கண்ணீர் வடிப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில், காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங், பிரபல பத்திரிகையாளர் ஷோபா டே உட்பட பலர், சமூக வலைதளத்தில், ஒரு செய்தியை பகிர்ந்தனர்.

shobhade

அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் முகப்பு பக்கம் என, அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதில், மோடியை விமர்சிக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.

இது உண்மையான பதிவா என்பது குறித்து விசாரணை நடத்தியதில், அது போலியானது என்பது தெரிய வந்துள்ளது. இதனால், பொய் செய்தியை பகிர்ந்த பிரபலங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version