- Ads -
Home இந்தியா ரூ.1.77,000/- வரை சம்பளம்! ESIC நிறுவனத்தில் வேலை!

ரூ.1.77,000/- வரை சம்பளம்! ESIC நிறுவனத்தில் வேலை!

ESIC
ESIC

Employees’ State Insurance Corporation எனப்படும் ESIC நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் சென்னை பிரிவு அறிவிப்பில் Professor, Associate Professor & Assistant Professor ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் – ESIC
பணியின் பெயர் – Professor, Associate Professor & Assistant Professor
பணியிடங்கள் – 18
Interview Date – 12.08.2021 & 13.08.2021

பணியிடங்கள் :

ESIC நிறுவனத்தில் Professor, Associate Professor & Assistant Professor பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் மொத்தமாக 18 பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சமாக 67 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளநிலை/ முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.1,01,000/- முதல் அதிகபட்சம் ரூ.1.77,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் சோதனை ஆனது வரும் 12.08.2021 மற்றும் 13.08.2021 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
SC/ ST/ PWD / Female/ EXSM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 12.08.2021 மற்றும் 13.08.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தேவையான சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download ESIC Recruitment – https://www.esic.nic.in/attachments/recruitmentfile/f1c14e338260133f744c6113ce4c2305.pdf

Application Form – https://www.esic.nic.in/attachments/recruitmentfile/08158de4b8c9dc8a2bf25b9fe25fa9b8.pdf

Official Site – https://www.esic.nic.in/recruitments/index/page:5?url=recruitments

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version