- Ads -
Home விளையாட்டு IPL 2022: கோல்கத்தா Vs சன்ரைசர்ஸ்

IPL 2022: கோல்கத்தா Vs சன்ரைசர்ஸ்

ஆனால் அதன் பின்னர் ஆட வந்த ராகுல் திரிபாதியும் ஐடன் மர்க்ரமும் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர்.

ipl 2022

ஐபிஎல் 2022 : கொல்கொத்தா vs சன்ரைசர்ஸ்
– கே.வி. பாலசுப்பிரமணியன் –

சன்ரைசர்ஸின் தொடர் மூன்றாவது வெற்றி

நேற்று, ஏப்ரல் பதினைந்தாம் நாள் கொல்கொத்தா, சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே மும்பையின் ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 25ஆவது போட்டி நடந்தது.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (8 விக்கெட்டுக்கு 175 – நிதீஷ் ராணா 54, ஆண்ட்ரே ரசல் 49, நடராஜன் 3/37) சன்ரைசர்ஸ் அணியிடம் (மூன்று விக்கட் இழப்பிற்கு 176, ராகுல் திரிபாதி 71, ஐடன் மர்கரம் 68) தொல்வியடைந்தது. டாசில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் அணி கொல்கொத்தா அனியை மட்டையாடச் சொன்னது.

பவர்ப்ளே ஆறு ஓவர்கள் முடிவில் அந்த அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 38 ரன் மட்டுமே எடுத்திருந்தது. சஷாங்க் சிங் வீசிய எட்டாவது ஓவரில் ஐந்து பந்து மட்டுமே வீசப்பட்டது. (அம்பயர் ஜி.ஆர். சதாசிவ ஐயர்) அதன் பிறகு சஷாங்க் பந்து வீசவில்லை.

கொல்கொத்தா அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் (28 ரன்), நிதீஷ் ராணா (54 ரன்), ஆண்ட்ரே ரசல் (49 ரன்) ஆகிய மூவர் மட்டுமே ஓரளவிற்கு விளையாடினர். தொடக்க வீரர்கள் இருவரும் விரைவில் ஆட்டமிழந்ததால் சுனில் நரைன் நாலாவதாக விளையாட அனுப்பப்பட்டார்.

ஆனால் அவரும் 6 ரன்னுக்கு அவுட்டானார். 20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி, எட்டு விக்கட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. அடுத்து விளையாட வந்த சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மாவும் கேன் வில்லியம்சனும் சோபிக்கவில்லை.

ஆனால் அதன் பின்னர் ஆட வந்த ராகுல் திரிபாதியும் ஐடன் மர்க்ரமும் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version