- Ads -
Home இந்தியா சத்தீஸ்கர் ஹெலிகாப்டர் விபத்து- இரு விமானிகள் பலி..

சத்தீஸ்கர் ஹெலிகாப்டர் விபத்து- இரு விமானிகள் பலி..

சத்தீஸ்கர் மாநில அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையம் அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் பரிதாபமாக பலியானர்.

கீழே விழுந்து நொருங்கிய அந்த ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் கிருஷ்ண பாண்டா, ஏபி ஸ்ரீவஸ்தவா ஆகோயர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலன் இன்றி இருவரும் உயிரிழந்தனர்.  

இந்த விபத்து குறித்து  தமது டுவிட்டர் பதிவில் வேதனை தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர் ர் பூபேஷ் பாகேல், உயிரிழந்த விமானிகள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், உடனடியாக நிவாரண வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விமானிகள் ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது ஹெலிகாப்டரில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணிகள் யாரும் இல்லை.
மானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் இரவு 9:10 மணியளவில் விமானப் பயிற்சியின் போது இந்த சம்பவம் நடந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் அகர்வால் தெரிவித்துள்ளார்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

22 627d63ac64215

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version