- Ads -
Home இந்தியா IPL 2024: சென்னை, கொல்கத்தா அணிகள் வெற்றி!

IPL 2024: சென்னை, கொல்கத்தா அணிகள் வெற்றி!

கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் சுனில் நரேன் தனது சிறப்பான பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும்  ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ipl 2024

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

46ம் நாள்: ஐபிஎல் 2024 – 05.05.2024 

இரண்டு ஆட்டங்கள்

இன்று ஞாயிற்றுக்கிழமை; எனவே இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை அணி (167/9, ரவீந்தர ஜதேஜா 43, ருதுராஜ் குய்க்வாட் 32, டேரில் மிட்சல் 30, ராஹுல் சாஹார் 3/23, அர்ஷ்தீப் சிங் 2/42, ஹர்ஷல் படேல் 3/24) பஞ்சாப் அணியை (139/9, பிரப்சிம்ரன் சிங் 30, ஷஷாங்க் சிங் 27, ஹர்பிரீத் ப்ரார் 17, ராஹுல் சாஹார் 16, ரவீந்தஜதேஜா 3/20, துஷார் தேஷ்பாண்டே 2/35, சிமர்ஜீத் சிங் 2/16) 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று தர்மசலாவில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் சென்னை அணி முதலில் மட்டையாடவந்தது. 

வெற்றிக்குத் தேவையான 168 ரன்களை அடைய ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி சுமார் 45 நிமிடங்களில் தங்களின் மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், அவர்களது ஆட்டத்தில் கெட்டது நல்லதை விட அதிகமாக இருந்ததைக் காண்பித்தது.

சாம் கரனின் வீரர்கள் டாஸில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர். ஐந்தாவது மற்றும் ஏழாவது ஓவர்களுக்கு இடையில் 18 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்து அவர்கள் விளையாடிய போது, 168 ரன்களை எளிதில் அடித்துவிடுவார்கள் எனத் தோன்றியது. 

அப்போது சமன்பாடு 78 பந்துகளில் 112 ரன்கள் தேவை என்பதாகும். அச்சமயம் அவர்களிடம் எட்டு விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. இது சரிவதற்கான நேரம் அல்ல, ஆனால் பஞ்சாப் அணி சரிந்தது. அவர்களின் செட் பேட்டர்கள், அவர்களின் கேப்டன் மற்றும் அவர்களின் ஃபினிஷர் இருவரையும் இழந்தனர். அவர்கள் 62/2வில் இருந்து 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களுக்குச் சரிந்தனர்.

சென்னை அணியில் இன்று ருதுராஜ் கெய்க்வாட் (21 பந்துகளில் 32 ரன்), டேரில் மிட்சல் (19 பந்துகளில் 30 ரன்), ரவீந்தர ஜதேஜா (26 பந்துகளில் 43 ரன்) மூவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். அஜிக்யா ரஹானே (9 ரன்), ஷிவம் துபே (பூஜ்யம் ரன்), மொயீன் அலி (17 ரன்), மிட்சல் சாண்ட்னர் (11 ரன்), தோனி (கோல்டன் டக், பூஜ்யம் ரன்) என மற்ற வீரர்கள் இன்று சரியாக ஆடவில்லை. இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 167 ரன் மட்டுமே அடித்தது. 

168 ரன் என்பது எளிய இலக்கு எனச் சொல்ல முடியாது; இருப்பினும் அடையக்கூடிய இலக்கு. பஞ்சாப் அணியின் ஜானி பெயர்ஸ்டோ (7 ரன்) மற்றும் ரிலீ ரோஸ்கோ (பூஜ்யம் ரன்) இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் பிரப்சிம்ரன் சிங் (23 பந்துகளில் 30 ரன்) மற்றும் ஷஷாங்க் சிங் (20 பந்துகளில் 27 ரன்) அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன் பின்னர் சாம் கரண் (7 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (பூஜ்யம் ரன், கோல்டன் டக்), அஷுத்தோஷ் ஷர்மா (10 பந்துகளில் 3 ரன்), ஹர்பிரீத் பிரார் (13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 17 ரன்), ஹர்ஷல் படேல் (12 ரன்), ராஹுல் சாஹர் (16 ரன்) ரபாடா (ஆட்டமிழக்காமல் 11 ரன்) ஆகிய வீரர்கள் நிலைத்து ஆட முயற்சிக்கவில்லை. இதனால் அந்த அணி 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து 28 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 

சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜதேஜா தனது சிறப்பான பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும்  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கொல்கொத்தா அணி (சுனில் நரேன் 81, பில் சால்ட் 32, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 32, ரமந்தீப் சிங்க் 25*, ஷ்ரேயாஸ் ஐயர் 23, நவீன் உல் ஹக் 3/49) லக்னோ அணியை (16.1 ஓவரில் 137, மார்கஸ் ஸ்டோயினிஸ் 36, கே.எல். ராகுல் 25, ஆஷ்டன் டர்னர் 16, ஆயுஷ் பதோனி 15, ஹர்ஷித் ரானா 3/24, வருண் சக்ரவர்த்தி 3/30, ஆண்ட்ரு ரசல் 2/17, சுனில் நரேன் 1/22) 98 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று லக்னோவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் கொல்கொத்தா அணி முதலில் மட்டையாடவந்தது. 

இந்த ஆட்டம் முழுவதும் கொல்கொத்தா அணியின் ஆதிக்கம்தான். அந்த அணியின் ரமந்தீப் சிங் 416.7 என்றா ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தார். குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வெங்கடேஷ் ஐயருடையது. அவர் ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்ததால் ஸ்ட்ரைக்ரேட் 100. இருநூறுக்கும் மேல் ஸ்ட்ரைக்ரேட் கொண்டவர்கள் இருவர். 100க்கும் 200க்கும் இடையே ஸ்ட்ரைக் ரேட் கொண்டவர்கள் நால்வர். பந்து வீசும்போது சுனில் நரேனைத்தவிர மற்ற சுழல் பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா மூன்று விக்கட் எடுத்தார்கள். இதனால் கொல்கொத்தா அணி சூப்பர் வெற்றி பெற்றது. இதன் மூலம் நல்ல் நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளது.

கொல்கொத்தா அணி முதலில் பேட்டிங் செய்த்டபோது சுனில் நரேன் (39 பந்துகளில் 81 ரன், 6 ஃபோர், 7 சிக்சர்) லக்னோ அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் துவம்சம் செய்தார்.   அவருடன் தொடக்க வீரராக இறங்கிய பில் சால்ட் (14 பந்துகளில் 32 ரன்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (26 பந்துகளில் 32 ரன்), ரசல் (8 பந்துகளில் 12 ரன்), ரிங்கு சிங் (11 பந்துகளில் 16 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (15 பந்துகளில் 23 ரன்), ரமன் தீப் சிங் (6 பந்துகளில் 25 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), வெங்கடேஷ் ஐயர் (1 ரன்) எடுத்ததால் கொல்கொத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 235 ரன் எடுத்தது.

236 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய லக்னோ அணியில் அதிக பட்ச ஸ்கோரே 36 ரன் தான். ஒற்றை இலக்க ஸ்கோர் எடுத்தவ்ர்கள் ஆறு பேர். கே.எல். ராகுல் (25 ரன்), அர்ஷின் குல்கர்ணி என்ற மற்றொரு தொடக்க வீரர் (9 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (21 பந்துகளில் 36 ரன்), இந்த ஐபிஎல்லின் மெகா ஃபெயிலியரான தீபக் ஹூடா (5 ரன்), நிக்கோலஸ் பூரன் (10 ரன்). ஆயுஷ் பதோனி (15 ரன்), ஆஷ்டன் டர்னர் (16 ரன்), க்ருணால் பாண்ட்யா (5 ரன்), யுத்வீர் சிங் (7 ரன்), ரவி பிஷ்னோய் (2 ரன்), நவீன் உல் ஹக் (பூஜ்யம்) என அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்ததால் லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 137 ரன் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.  

கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் சுனில் நரேன் தனது சிறப்பான பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும்  ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை டெல்லியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

05.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1183161.453
ராஜஸ்தான் 1082160.622
சென்னை1165120.700
ஹைதராபாத்1064120.072
லக்னோ116512-0.371
டெல்லி115610-0.442
பெங்களூரு11478-0.049
பஞ்சாப்10468-0.062
குஜராத்11478-1.320
மும்பை11386-0.356

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version