- Ads -
Home இந்தியா IPL 2024: சென்னை, பெங்களூர் அணிகள் வெற்றி!

IPL 2024: சென்னை, பெங்களூர் அணிகள் வெற்றி!

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 200 ரன் எடுத்து சென்னை அணியை 18 ரன் கள் வித்தியாசத்தில் வென்றால் பிளே ஆஃபுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. 

ipl 2024

53ம் நாள்: ஐபிஎல் 2024 – 12.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன். முதல் ஆட்டம் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் 

ராஜஸ்தான் அணியை (141/5, ரியன் பராக் 47, துருவ் ஜுரல் 28, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24, ஜாஸ் பட்லர் 21, சஞ்சு சாம்சன் 15, சிம்ரஜீத் சிங் 3/26) சென்னை அணி (145/5, ருதுராஜ் கெய்க்வாட் 42*, ரச்சின் ரவீந்திரா 27, ட்ரில் மிட்சல் 22, ஷிவம் துபே 18, சமீ ரிஸ்வி 15*, மொயீன் அலி 10, அஷ்வின் 2/35) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (21 பந்துகளில் 24 ரன்) மற்றும் ஜாஸ் பட்லர் (25 பந்துகளில் 21 ரன்)சுமாரான் தொடக்கம் தந்தனர்.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் சஞ்சு சாம்சன் இன்று 15 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். நான்காவதாகக் களமிறங்கிய ரியான் பராக் (35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), துருவ் ஜுரல் (18 பந்துகளில் 28 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதன் பின்னர் ஷுபம் துபே (பூஜ்யம்ரன்), அஷ்வின் (1 ரன்) ஆகியோர் விளையாடியதால் ராஜஸ்தான் அணி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 141 ரன் எடுத்தது. சுழல் பந்து வீச்சாளர் சிம்ரஜீத் சிங் 26 ரன் கொடுத்து 3 விக்கட்டுகள் வீழ்த்தினார். 

142 ரன் என்ற எளிய இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா (18 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (41 பந்துகளில் 42 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய டரியல் மிட்சல் (22 ரன்), மொயீன் அலி (10 ரன்), ஷிவம் துபே (11 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), சமீர் ரிஸ்வி (ஆட்டமிழக்காமல் 15 ரன்) என அனைவரும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடினார்கள். இதனால் சென்னை அணி 18.2 ஓவர்களில் 5 விக்கட்டு இழப்பிற்கு 145 ரன் எடுத்து 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சென்னை அணியின் சுழல் பந்துவீச்சாளர், சமீர் ரிஸ்வி தனது சிறப்பான பந்துவீச்சிற்காகவும் கடைசியில் அடித்த தொடர் இரண்டு ஃபோர்களுக்காகவும் ஆட்டநாயகன் விருதுபெற்றார். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் 

பெங்களூரு அணியை (187/9, ரஜத் படிதர் 52, வில் ஜேக்ஸ் 41, காமரூன் கிரீன் 32*, விராட் கோலி 27, மஹிபால் லோமர் 13, கலீல் அகமது 2/31, ரசிக் சலாம் 2/23) டெல்லி அணி (19.1 ஓவரில் 140, அக்சர் படேல் 57, ஜேக் ஃப்ரேசர் மகுர்க் 21, ஷாய் ஹோப் 29, யஷ் தயால் 3/20, லாக்கி ஃபெர்கூசன் 2/23) 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் பெங்களூரு அணி முதலில் மட்டையாட வந்தது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி (13 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் டியு பிளேசிஸ் (7 பந்துகளில் 6 ரன்) சுமாரான தொடக்கம் தந்தனர்.

அடுத்து களமிறங்கிய வில் ஜேக்ஸ் (29 பந்துகளில் 41 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ரஜத் படிதர் (32 பந்துகளில் 52 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்), காமரூன் கிரீன் (24 பந்துகளில் 32 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதன் பின்னர் மஹிபால் லோமர் (13 ரன்), தினேஷ் கார்த்திக் (பூஜ்யம் ரன்), ஸ்வப்னில் சிங் (பூஜ்யம் ரன்), கரண் ஷர்மா (6 ரன்), முகமது சிராஜ் (6 ரன்) ஆகியோர் விளையாடியதால் ராஜஸ்தான் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. 

188 ரன் என்ற கடின இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய டெல்லி அணியில் இன்று ரிஷப் பந்த் ஆடவில்லை. குறைவான ஓவர் ரேட்டுக்காக அவருக்கு அணித்தலைவர் என்ற முறையில் ஒரு ஆட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் (1 ரன்) முதல் ஓவர் நாலாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் போரல் மூன்றாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டாவது தொடக்க வீரரான ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (8 பந்துகளில் 21 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), அக்சர் படேல் (39 பந்துகளில் 57 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) வெற்றிக்கான நம்பிக்கையைத் தந்தனர்.

ஆனால் அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (3 ரன்), ரசிக் சலாம் (10 ரன்), குல்தீப் யாதவ் (6 ரன்), முகேஷ் குமார் (3 ரன்), ஆகியோர் அதிரடியாக ரன் சேர்க்கத் தவறியதால் டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் 140 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

டெல்லி அணி பெங்களூரு அணி பேட்டிங் செய்யும்போது 4 கேட்சுகளைத் தவறவிட்டது. டெல்லி அணியின் இன்றைய அணித்தலைவர் அக்சர் படேல் திறமையாக ஆடியபோதும் பிற பேட்டர்கள் அவருக்குச் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இது பெங்களூரு அணியின் ஐந்தாவது தொடர் வெற்றி. தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த அந்த அணி இப்போது வெற்றிப்ப் பாதையில் செல்கிறது.

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 200 ரன் எடுத்து சென்னை அணியை 18 ரன் கள் வித்தியாசத்தில் வென்றால் பிளே ஆஃபுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. 

டெல்லி அணியின் சுழல் பந்துவீச்சாளர், அக்சர் படேல்  ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் பெங்களூரு அணியிந் காமரூன் கிரீன் (32 ரன், 1 விக்கட்) ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

நாளை அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.  

12.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1293181.428
ராஜஸ்தான் 1284160.349
சென்னை1376140.528
ஹைதராபாத்1275140.406
பெங்களூரு1367120.387
டெல்லி136712-0.482
லக்னோ126612-0.769
குஜராத்125710-1.063
மும்பை13498-0.271
பஞ்சாப்12488-0.423

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version