- Ads -
Home இந்தியா IPL 2024: ஆக… ஆக… தோனி புராணம் இனி இல்லை… அடடே!

IPL 2024: ஆக… ஆக… தோனி புராணம் இனி இல்லை… அடடே!

பெங்களூரு அணியின் அணித்தலைவர் ஃபெஃப் டியு பிளேசிஸ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ipl 2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐம்பத்தியொன்பதாம் நாள்

ஐபிஎல் 2024 – 18.05.2024

இன்று பெங்களூருவில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. இன்று பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை நேற்று தெரிவித்திருந்தோம். எதிர்பார்த்ததைப் போலவே முதலாவதாக பெங்களூரு அணி விளையாடியபோது மழை குறுக்கிட்டது. இருந்தாலும் ஆட்டம் முழுமையாக நடைபெற்றது. 

பெங்களூரு அணி (218/5, டியு பிளேசிஸ் 54, விராட் கோலி 47, ரஜத் படிதர் 41, காமரூன் கிரீன் 38*, தினேஷ் கார்த்திக் 14, கிளன் மேக்ஸ்வெல் 16, ஷர்துல் தாகூர் 2/61) சென்னை அணியை (191/7, ரவின் ரச்சீந்திரா 61, ரவீந்திர ஜதேஜா 42*, அஜிங்க்யா ரஹானே 33, எம்.எஸ். தோனி 25, யஷ் தயால் 2/42) 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

பூவாதலையா வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் பெங்களூரு அணி முதலில் மட்டையாட வந்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி (29 பந்துகளில் 47 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் டியு பிளேசிஸ் (39 பந்துகளில் 54 ரன, 3 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர். இடையில் மூன்றாவது ஓவருக்குப் பின்னர் 20 நிமிடம் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. கோலி 10ஆவது ஓவரிலும் டியு பிளேசிஸ் 13ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த டியு பிளேசிஸ் நான் ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்தபோது ரஜத் படிதர் அடித்த பந்தை சாண்ட்னர் தடுத்ததால் பந்து ஸ்டம்பில் பட்டு ரன் அவுட் ஆணார். ரஜத் படிதர் (23 பந்துகளில் 41 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்), காமரூன் கிரீன் (17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 38 ரன் 3 ஃபோர், 3 சிக்சர்), தினேஷ் கார்த்திக் (6 பந்துகளில் 14 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), கிளன் மேக்ஸ்வெல் (5 பந்துகளில் 16 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) என அனத்து பெங்களூரு அணி பேட்டர்களும் நன்றாக ஆடினர். இதனால் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கட் இழப்பிற்கு 218 ரன் எடுத்தது. 

219 ரன் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் (பூஜ்யம் ரன், கோல்டன் டக்) முதல் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா (37 பந்துகளில் 61 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆட்னார். மூன்றவதாகக் களமிறங்கிய டேரில் மிட்சல் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தபோதிலும் அவருக்குப் பின்னர் வந்த அஜிங்க்யா ரஹானே (22 பந்துகளில் 33 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ரச்சினுக்கு கம்பனி கொடுத்தார். இன்று ஷிவம் துபே (7 ரன்), மிட்சல் சாண்ட்னர் (3 ரன்) இருவரும் ஜொலிக்கவில்லை. ஆயினும் நம்பிக்கை ஆட்டக்காரர் ரவீந்திர ஜதேஜா (22 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் தோனி (13 பந்துகளில் 25 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் சென்னைக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினர். 20ஆவது ஓவரில் யஷ் தயால் பந்துவீச்சில் இரண்டாவது பந்தில் தோனி அவுட்டானார். அதற்கடுத்த நாலு பந்துகளையும் யஷ் ரன் அடிக்கமுடியாத வகையில் வீசினார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணியால் 7 விக்கட் இழப்பிற்கு 191 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் அந்த அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.   

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைகிறது. சென்னை போட்டியில் இருந்து வெளியேறுகிறது. கடைசி ஓவரில் 35 ரன் எடுத்தால் வெற்றி; 16 ரன் எடுத்தால் பிளே ஆஃபுக்கு சென்னை அணி போகலாம் என்ற நிலை இருந்தது. முதல் பந்தில் தோனி ஒரு சின்சர் அடித்தார். ஆனால் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பதிலாக விளையாட வந்த ஷர்துல் தாகூர் அடுத்த இரண்டு பந்துகளில் ரன் எடுக்க முடியவில்லை. கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன் எடுக்க வேண்டும்; அந்த இரண்டு பந்துகளையும் சந்தித்தவர் ஜதேஜா. சாதாரணமாக இரண்டு தொடர் சிக்சர்கள் ஜதேஜாவால் அடிக்க முடியும். ஆனால் அவரால் அடிக்க முடியவில்லை. பெங்களூரு அணி வெர்றிக்கு உரியவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

பெங்களூரு அணியின் அணித்தலைவர் ஃபெஃப் டியு பிளேசிஸ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் கௌஹத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்  அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

18.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான் 1385160.273
ஹைதராபாத்1375150.406
பெங்களூரு1477140.459
சென்னை1477140.392
டெல்லி147714-0.377
லக்னோ147714-0.667
குஜராத்145712-1.063
பஞ்சாப்135810-0.347
மும்பை144108-0.318

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version