- Ads -
Home இந்தியா மோடியின் சீன பயணம் நிறைவு! இதயங்களை வென்ற இந்தியா!

மோடியின் சீன பயணம் நிறைவு! இதயங்களை வென்ற இந்தியா!

modi in china

இரண்டு நாள் சீன பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்புகிறார்.

டோக்லாம் பிரச்னை உட்பட சீன- இந்திய உறவில் சுமூக நிலை இல்லாமல் இருந்து வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சீன பயணம் மிகவும் வித்தியாசமாக அமைந்தது. இரு நாட்டு தலைவர்களும் அன்னியோன்னியமாக அளவளாவினர். பிரச்னைகள் குறித்து தொலை நோக்கு சிந்தனையுடன் விவாதித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த பேச்சுவார்த்தை குறித்தும், ஏரியில் படகு வீட்டில் அமர்ந்து கொண்டு டீ குடித்த படங்கள், சந்தித்துப் பேசும் படங்கள் குறித்தும் தகவல் வெளியிட்டார்.

தென் கொரிய வட கொரிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு நிகழ்த்தியதைப் போல் இரு பெரும் அண்டை நாடுகளின் தலைவர்களான மோடியும் ஜீ ஜின்பிங்கும் நடத்திய உச்சி மாநாடு மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்து உலக நாடுகள் உற்று நோக்கின. அந்த வகையில் இது முக்கியப் பயணமாக அமைந்துள்ளது.

தனது இரண்டுநாள் பயணத்தின் இறுதி நாளான இன்று பிரசித்தி பெற்ற கிழக்கு ஏரி பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்டு நல்லுறவு, சர்வதேச விவகாரங்கள் என பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

மோடியின் சாய் பர் சர்ச்சா என்ற நிகழ்ச்சி பிரபலமாக இருந்தது. டீ குடித்துக் கொண்டே, நாட்டு மக்களிடம் பிரச்னைகள் குறித்து விவாதிப்பது அந்த நிகழ்ச்சியின் நோக்கம். அது போல் சீனாவிலும் அதிபர் ஜீ ஜின்பிங்குடன் டீ குடித்துக் கொண்டே, பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இது தனக்கு இனிய அனுபவமாக இருந்தது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சீன உறவை பலப்படுத்துவது, இருநாட்டு ராணுவத்தினரிடையே தகவல் தொடர்பை பலப்படுத்தி நம்பிக்கையை வளர்த்தெடுப்பது போன்றவை குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

பயங்கரவாதமே பொது அச்சுறுத்தல் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்ட நிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாக உறுதி பூண்டனர். சீன அதிபர் ஜீ ஜின்பிங் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வர வேண்டும் என்று இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி அவருக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த ஆக்க பூர்வமான சந்திப்பு குறித்து இந்தியாவுக்கான சீன தூதர் லூ ஜாஹுய் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த போது, தனது 5 ஆண்டு கால அதிபர் வாழ்வில், பீஜிங்கை விட்டு இரு முறை தான் பிற நாட்டு தலைவர்களை வரவேற்க ஜீ ஜின்பிங் வெளியில் வந்துள்ளார். முதலில் 2015ல், அதன் பின் தற்போது. இரண்டுமே இந்திய பிரதமர் மோடிக்காகத்தான்! இது, மோடிக்காகவும் இந்திய சீன நல்லுறவுக்காகவும் சீன அதிபர் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version