- Ads -
Home இந்தியா காஷ்மீர் கல்வீச்சில் உயிரிழந்த சென்னை இளைஞர் திருமணி: சிக்கியுள்ள 135 பேரை மீட்க கோரிக்கை!

காஷ்மீர் கல்வீச்சில் உயிரிழந்த சென்னை இளைஞர் திருமணி: சிக்கியுள்ள 135 பேரை மீட்க கோரிக்கை!

kashmir thirumaniகாஷ்மீர் ஸ்ரீநகரில் தற்போது 135 சுற்றுலா பயணியர் இருப்பதாகவும், கல்வீச்சு காட்டுமிராண்டித் தன வன்முறைச் சம்பவங்கள் தொடர்வதால் அவர்கள் சன்ஷைன் ஹோட்டலிலேயே தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

நகரில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்வதால், சுற்றுலா பயணியர் எவரும் சன்ஷைன் ஹோட்டலை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த திருமணி என்பவர், கல்வீசிக் கலவரம் செய்யும் காட்டுமிராண்டிகளின் கல்வீச்சில் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், அதிமுக எம்.பி., வேணுகோபால் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில், காஷ்மீரில் உள்ள 135 தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கல்வீச்சில் உயிரிழந்த இளைஞர் திருமணி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அங்கு சுற்றுலா சென்றுள்ள 135 பேர் பாதுகாப்பாக தமிழகம் திரும்ப தேவையான உதவிகளை தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக தமிழ்நாடு இல்ல அதிகாரிகளை, 011 – 24193100, 011 – 24193200, 011 – 24193450 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்ப தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேரிக்கை விடுத்துள்ளதாகவும் முதல்வர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அவர் இது குறித்துக் குறிப்பிட்டபோது, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஏற்பட்ட வன்முறையின் போது கல்வீச்சில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி இறந்தது கண்டிக்கத்தக்கது. துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை திருமணியின் உடல் காஷ்மீரில் இருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவில் 4 பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version