- Ads -
Home சற்றுமுன் திருமயத்தில் தீரர் சத்யமூர்த்தி சிலை திறப்பு

திருமயத்தில் தீரர் சத்யமூர்த்தி சிலை திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி சிலையை குமரிஅனந்தன் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி நினைவு மணிமண்டபம் ரூ 3லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா சுப்பையா தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு தீரர் சத்தியமூர்த்தி பேரன் சீனிவாசமூர்த்தி முன்னிலை வகித்தார். மணிமண்டபத்தை அழகுதேவர் அறக்கட்டளை சிந்தாமணிஅம்மாள் திறந்து வைத்தார்.

மணிமண்டபம் உள்ளே அமைக்கப்பட்டுள்ள தீரர் சத்தியமூர்த்தி சிலையை மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் இலக்கிய செல்வர் குமரிஅனந்தன் திறந்து வைத்தார். மணிமண்டப கல்வெட்டை திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி திறந்து வைத்தார்.

தீரர் சத்தியமூர்த்தி வாழ்க்கை வரலாறு பதாகையை முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராம் திறந்து வைத்தார். விழாவில் பேசிய மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் இலக்கிய செல்வர் குமரிஅனந்தன் 1936-ல் மாநில காங்கிரஸ் தலைவராக தீரர் சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளராக காமராஜர் தேர்ந்தெடுக்கபடட்டார். தனது குருவான தீரர் சத்தியமூர்த்தி நினைவாக காமராஜர் சச்தியமூர்த்தி பவனை கட்டினார்.

அதை நான் (குமரிஅனந்தன்) மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் பொமுது 1996ம் ஆண்டு மூப்பனார் கைப்பற்றினார். எனது குருவான காமராஜர் கட்டி சத்தியமூர்த்தி பவனை நான் மூப்பனரோடு கைகோர்ந்து மீட்டெடுத்தேன்.

திருமயம் ஊராட்சி மன்ற அலுவலகம் , பள்ளிகளில் தீரர் சத்தியமூர்த்தி திரு உருவபடம் வைக்கவேண்டும். அப்போது தான் இளம் வயது குழந்தைகளுக்கு நம் ஊரில் பிறந்த தீரர் சத்தியமூர்த்தி பற்றி தெரிந்து கொள்வார்கள்.

தனிமனிதனாக இருந்து இந்த மணிமண்டபத்தை கட்டிய அழகு தேவர் சத்திவேல் குடும்பத்தினரை மனதார பாராட்டுகிறேன் இவ்வாறு இலக்கிய செல்வர் குமரிஅனந்தன் பேசினர்.

விழாவில் தீரர்சத்தியமூர்த்தி மணிமண்டபம் கட்ட உதவியாக இருந்த புலவர் முத்து வெங்கடேசன் உள்ளிட்ட பலருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

விழாவில் நாட்டின் விடுதலை போராட்டத்திற்காக 10 அயிரம் பவுன் தங்கம், 1000 ஏக்கா; நிலத்தை சுபாஸ் சந்திரபோஸ்யிடம் வழங்கிய ஹமீதுஹன்சா குடும்பத்தினருக்கு பொற்கிழி மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராமசாமி, முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் என். ஜாகீர் உசேன் முன்னாள் எம்.எல்ஏக்கள் சுவாமிநாதன், கவிதைப்பித்தன், புஸ்பராஜ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் சந்திரசேகரன் திமுக ஒன்றிய செயலாளர் எம்.பி.சரவணன் தேமுதிக ஒன்றிய செயலாளர் பட்டணம் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அழகு தேவர்சத்திவேல் வருகை தந்த அனைத்து விருந்தினருக்கும் நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

செய்தி : ஜெயசந்திரன், புதுக்கோட்டை

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version