- Ads -
Home சற்றுமுன் திருமணம் எப்போது செய்யலாம்?

திருமணம் எப்போது செய்யலாம்?

திருமணம் எப்போது செய்யலாம்?
மார்ச் பஸ்ட் வீக்குல லீவு.  அதோட என் அக்காவுக்கும் லீவு.  மச்சானுக்கும் லீவு.  சோ…. இந்த டேட்டுல கல்யாண தேதி ஒன்னை சொல்லுங்களேன் ஜோசியர்.  இது மிஸ்டர் ராகவனின் கோரிக்கை.
ராகவனின் கோரிக்கை நியாயமானதுதான்.  அரசாங்க விடுமுறையை அனுசரித்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.  அதோட இஷ்ட ஜன பந்துகளுக்கும் விடுமுறை.  அவர் வரலை, இவர் வரலை என்று வருத்தம் கொள்ள தேவையில்லை.  
சரி… இது எல்லாம் நியாயம்தான்.  ஆனால்… மனித சூழலை மதிப்பிடுவது இருக்கட்டும்.  மகத்தான கிரக சூழல் எப்படி இருக்கிறது?
ஏற்று கொண்டாலும், மறுத்தாலும் திருப்பு முனையை தருகிற கிரகங்கள் திருப்திகரமான சூழலில் இருக்கிறதா இதுதான் நம் முன் இருக்கும் கேள்வி.  
என்ன சார்…. ரொம்ப யோசிக்க வைக்கிறேனா.  நான் கேட்கிறது நியாயம்தானே.  சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நாம் வேண்டுமானால் வளைந்து கொடுக்கலாம்.  கிரகங்களை கட்டுபடுத்துவது எப்படி?
ஜாஜகத்தில் திருமண திசை வரணும், கோட்ச்சாரம் என்று சொல்லக்கூடிய கிரக மாறுதல் சாதகமாக இருக்கணும்.  குறிப்பாக குரு பகவான்.  இவர் நல்ல இடத்திருக்கு வரும் போதுதான் நல்லதே நடக்கும்.  அதனால் தான் குரு பலம் வியாழ நோக்கம் என்றெல்லாம் ஜோதிடர் சொல்வது.  
ஒகே…. சாதகமான இடத்தில் குரு இல்லை.  அதாவது குரு 1 , 3 , 4 , 6 , 8 , 10 ம் இடங்களில் கோட்ச்சார நிலையில் இருக்கும் போது திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்வது சாஸ்த்திரப்படி தவறு.  
ஜோதிடர் இப்படி சொன்னதும் ராகவன் என்ன கேட்டு இருப்பார்.  பரிகாரம் ஏதும் இருந்தால் சொல்லுங்களேன்.  இப்படிதானே கேட்டு இருப்பார்.  
இப்படித்தான் ராகவனும் கேட்டார்.  ஜோதிடர் திருமண தேதியை முடிவு செய்யும் முன்,  குரு பகவானுக்கு போன் பண்ணி,  ஹலோ குரு பகவான்… நான் தான் ஜோதிடர் சர்மா பேசுறேன்.  
என் கிளையன்ட் ஒருத்தர் ராகவன்னு பேரு.  வர்ற மார்ச் பஸ்ட் வீக்குல கல்யாணம் செய்யுறதா இருக்கார்.  அவர் மகர ராசி.  இப்போ எட்டாம் வீட்டுலே சஞ்சாரம் செய்றீங்க. கொஞ்சம் அஜ்ஜஸ்ட் பண்ணி அவர் திருமணத்திருக்கு ஒத்துழையுங்களேன்.  என்று கோரிக்கை விட முடியுமா?
அவரும் சரி…சரி… என்று தலையை ஆட்டுவாரா.  
நல்ல கேள்வி.  என்ன பதில்?  
முன்னே சொன்ன மாதிரி குரு  1 , 3 , 4 , 6 , 8 , 10 ம் இடங்களில் கோட்ச்சார நிலையில் இருக்கும் போது திருமணம் எய்ய முடியாது என்பதல்ல.  முடியும்… திருமணம் செய்ய முடியும்.  
ஆனால்… ஆனால்…. அவ்வாறு திருமணம் செய்தால் விளைவு பின் வருமாறு இருக்கும்.  
குரு 1 இல்
கணவன் மனைவி இருவருக்கும் இடையே இணக்கம் குறையும். பொதுவாக  கணவன் மனைவி உறவு என்பது என்ன?  அன்பு காட்டனும், அரவணைத்து கொல்லனும், விட்டு கொடுக்கணும், பகிர்ந்து கொல்லனும், ஆனால் இங்கேதான் முதல்ல விழும் ஆப்பு. 
உண்மையா சொல்லப்போனால் ஈகோ இல்லாத உறவு என்றால் கணவன் மனைவி உறவு தான்.   நான் ரொம்ப அழகா இருக்கேன்.  நான் ரொம்ப படிச்சு இருக்கேன்.  நான் யார் தெரியுமா.. எனக்கு கொம்பு முளைச்சு இருக்கு,  இப்படி எல்லாம் சிந்திக்காத உறவு.
ஆனால்…  ராசியில் குரு இருக்கும் போது திருமணம் செய்தால், யுத்த பூமி மாதிரி இருக்கும் உறவு.  அதோடு வளமான வம்ச விருத்தி இருக்காது.   பிறக்கும் குழந்தைகள் அறிவற்ற குழந்தையாக… இருக்கும்.  
குரு 3 இல் 
கோடி கோடியா செல்வம் குவிந்து இருந்தாலும் மனசுல நிம்மதி இருக்காது.  இழக்க கூடாததை இழந்த மாதிரி, நடக்க கூடாதது நடந்த மாதிரி மனசு தவிக்கும். 
அது மட்டுமா?
அன்பு கொண்ட உள்ளங்கள் குற்றம் காண்பதில்லை என்பது பொய்யாகும்.  ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி கொண்டிருப்பார்கள்.  கோட்டு போடாத வக்கீல் மாதிரி குறுக்கே குறுக்கே பேசிகிட்டு இருப்பார்கள்.
குரு 4 இல்
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்ற மாதிரி,  கட்டையோ நெட்டையோ, கருப்போ சிகப்போ, புதுமண தம்பதிகள் அன்பு கலந்து வாழனும்.  அதுதான் புது மன தம்பதியர்க்கு அழகு.  ஆனால்… இங்கேதான் வில்லங்கம் வரும். சுகம் குறையும்.  
குரு 6 இல்
வாரம் தோறும் வைத்தியரை பார்க்க வேண்டிய கட்டாயம் வரும்.  உடல் நலம் கெடும்.  6 இல் குரு இருக்கும் போது திருமணம் ஆகி,  அப்போது குழந்தை கருவாகி பிறந்தால்,  அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிள்ளை எதிரியாகத்தான் இருக்கும்.  செத்தால்  கொல்லி போடாத பிள்ளைன்னு சொல்வாங்களே கேள்வி பட்டதுண்டா…  அது இப்போதான் அரங்கேறும்.  
குரு 8 இல்
இருவரியில் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கும்.  ஆணுக்கு குரு எட்டில் இருந்தால் பெண் கட்டுபடாது.  பெண்ணுக்கு குரு எட்டில் இருந்தால் ஆண் சொல் பேச்சை கேட்கவே மாட்டார்.  இஷ்டம்னா இரு இல்லைனா உன் அப்பன் வீட்டுக்கு போய்க்கோனு சொல்லுவார். மொத்தத்தில் வசந்த காலம் போய், கசந்த காலம் தான் மிஞ்சும். 
குரு 10 இல்
கருத்து வேறுபாடு, வருமான குறைவு, கர்ப்ப சிதைவு, போன்றவை உருவாக காரணமாக அமைந்து விடும்.  அதனால் குரு 2 , 5 , 7 , 9 , 11 ம் இடங்களில் சஞ்சாரம் செய்யும் போது திருமணம் செய்யலாம்.  12 ம் இடம் கூட தவறு இல்லை.  சுப விரைய செலவு செய்யும் இடம் என்பதால் நல்லதே. 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version