- Ads -
Home சற்றுமுன் பொய் தகவலை பரப்பும் ரைசா! 5 கோடி நஷ்ட ஈடு.. மருத்துவர் வழக்கு!

பொய் தகவலை பரப்பும் ரைசா! 5 கோடி நஷ்ட ஈடு.. மருத்துவர் வழக்கு!

raiza
raiza

நடிகை ரைசாவை கட்டாயப்படுத்தி எந்த ஒரு சிகிச்சையும் வழங்கவில்லை, மருத்துவமனை மீது பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளோம் என மருத்துவர் பைரவி செந்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை ரைசா வில்சன் அண்மையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் பேஷியல் செய்ய ரூ 1.27 லட்சம் செலுத்தி சிகிச்சை எடுத்த நிலையில் தாம் வேண்டாம் என சொல்லியும் டாக்டர் பைரவி தனக்கு ஒரு தோல் சிகிச்சையை அளித்ததால் தனது முகம் வீங்கி, ரத்தக் கசிவு ஏற்பட்டதாக ரைசா தெரிவித்திருந்தார். மேலும் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

bharavi senthil

இந்த நிலையில் இதுகுறித்து பைரவி செந்தில் முதல்முறையாக வாய் திறந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகை ரைசா வில்சனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி செந்தில், மருத்துவர் பைரவி செந்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அவர்கள் பேசுகையில் நடிகை ரைசா வில்சன் எங்கள் மருத்துவமனையில் முதல் முறையாக சிகிச்சை பெற்றார். அதனால் மட்டுமே இப்படி பாதிப்பு எற்பட்டு இருப்பதாக பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்தார். மேலும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் கூறி இருந்தார்.

raiza 1

ஆனால் நடிகை ரைசா வில்சன் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரை மூன்று முறை சிகிச்சை பெற்றுள்ளார்.

மேலும் அவர் பெற்று வரும் சிகிச்சையில் திடீரென இப்படி ஏற்படலாம் என்றும் அந்த பாதிப்பு அதிகபட்சமாக 8 நாட்களில் சரி ஆகிவிடும் என்று தெரிந்தும் மருத்துவமனை மீது உள்நோக்கத்தோடு பொய்யான தகவலை தெரிவித்து உள்ளார்.

bharavi

மேலும் அவரை கட்டாயபடுத்தி எந்த ஒரு சிகிச்சையும் கொடுக்கவில்லை, முழுமையாக சிகிச்சை குறித்து விளக்கமளித்து அவரிடம் கையொப்பம் பெற்ற பின்னரே சிகிச்சை நடைபெற்றது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வில்சன் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்.

சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை. இதுகுறித்து எந்த ஒரு விசாரணைக்கும் தயாராக உள்ளோம் என்றார் பைரவி செந்தில்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version