- Ads -
Home சற்றுமுன் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களுக்காக… விஎச்பி சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களுக்காக… விஎச்பி சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்!

srivilliputhur oxygen
srivilliputhur oxygen

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மக்களுக்காக அர்ப்பணம்
விசுவ ஹிந்து பரிஷத் – விருதுநகர் மாவட்டத்திற்கு
ஹாங்காங் விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்டது. அதை முறைப்படி மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ‌ மணவாள மாமுனிகள் மடத்தில் வைத்து நடைபெற்றது.

மக்களுக்கு இந்த இயந்திரங்களை அர்ப்பணிக்கும் இந்த நிகழ்ச்சியல் கலந்து கொண்டு ஸ்ரீ‌ ஸ்ரீ ஸ்ரீ‌ சடகோப ராமானுஜ ஜீயர்‌ ஸ்வாமிகள் தன்‌ திருக்கரங்களால் தொடங்கி வைத்தார்

இதில் விசுவ ஹிந்து பரிஷத் – துறவியர் பேரவை மாநில அமைப்பாளர் பா.சரவணகார்த்திக், பா.ஜ.க மாவட்ட செயலாளர்‌ ராஜா அவர்கள், விசுவ ஹிந்து பரிஷத் விருதுநகர் மாவட்ட பொருளாளர் த.ஆனந்த் அவர்கள், இராஜபாளையம் நகர செயலாளர் சி.இசக்கிராஜ் அவர்கள், ஒன்றிய அமைப்பாளர் R.பாலமுருகன்‌ அவர்கள் கலந்து கொண்டனர்

இந்த இயந்திரத்தை பயன்படுத்தும் மக்கள் (மருத்துவரின் ஆலோசனைப்படி) எந்த கட்டணமும் இல்லாமல் இதை இலவசமாகவே பயன்படுத்தலாம்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது
இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார மக்கள் பயன்பெற தேவைப்படுவர்களுக்காக தொடர்பு எண்கள்‌ அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் இயந்திரத்தை விசுவ ஹிந்து பரிஷத் தன்னார்லவர்கள் வழிகாட்டுவார்கள்
தொடர்புக்கு:-
ஆனந்த்:- 9952195502
இசக்கிராஜ் :- 9092910878
பாலு :- 9787111774
வாசு :- 9790653631

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version