- Ads -
Home சற்றுமுன் அரசு பஸ்ஸில் குற்றால அருவி?

அரசு பஸ்ஸில் குற்றால அருவி?

bus raining

அரசு பேருந்தில் கொட்டும் மழையில் நனைந்த படியே பயணித்த பயணிகள்! போக்குவரத்து கழக அலட்சியத்தால் பயணிகள் அவதி!

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்று  வியாழக்கிழமை  இரவு ஏழு முப்பது மணி அளவில் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு சென்றது. வாடிப்பட்டி அருகே செல்லும் பொழுது, மழை பலமாக பெய்துள்ளது. அப்பொழுது, பேருந்து முழுவதும் மழைநீர் உள்ளே வடிய  ஆரம்பித்தது.

இதனால், பயணிகள் அனைவரும் நனைந்தபடியே பயணம் செய்தனர். மேலும் ,பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளில் நீரானது சென்றதால், சில இடங்களில் கருகிய வாடை வந்ததாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் .ஓட்டை உடைசல் பேருந்தை கொரோனா காலகட்டங்களில் பேருந்து ஓடாத நேரத்தில் சரி செய்திருக்கலாம் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபோன்ற, பேருந்துகளை இயக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமெனவும் ஓட்டுனரும் நடத்துனரும் பொதுமக்களிடையே கூறுகையில், நாங்கள் என்ன செய்வது நாங்கள் புகார் செய்து விட்டோம் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா, என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு பயணம் செய்ய அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version