- Ads -
Home சற்றுமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலருகே ஜவுளிக் கடையில் தீ விபத்து!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலருகே ஜவுளிக் கடையில் தீ விபத்து!

madurai vilakkuthoon shop fired
madurai vilakkuthoon shop fired

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள ஜவுளிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள விளக்குத்தூண் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த குமான் சிங் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மூன்றடுக்கு தளம் கொண்ட துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இரவு வழக்கம் போல பணிகளை முடித்துவிட்டு கடையை அடைத்து சென்ற நிலைல்லிலல், காலை 6 மணியளவில் கடையின் உள்ளே இருந்து புகை வந்துள்ளது. தீடீரென துணிக்டையின் கீழ் தளத்தில் தீ எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் விளக்குத்தூண் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் பெரியார்நிலையம், மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 பேர் 1 மணி நேர போரட்டத்திற்கு பின்பு துணிக்கடையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஜவுளிப்பொருட்கள் தீயில் எரிந்து சேதமானததாகவும், காவல்துறை முதல்கட்ட விசாரணையில் கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version