- Ads -
Home சற்றுமுன் இதுதான் ஹலால் சலூனா? பெண் மீது எச்சில் துப்பி முடிதிருத்தும் ஜாவீத் ஹபீப்!

இதுதான் ஹலால் சலூனா? பெண் மீது எச்சில் துப்பி முடிதிருத்தும் ஜாவீத் ஹபீப்!

halal saloon

உத்தர பிரதேசத்தில் பெண் தலையில் எச்சில் துப்பி அலங்காரம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

சிகையலங்காரம் செய்யும் நிபுணர் பெண்ணின் தலையில் எச்சிலை துப்பிவிட்டு, வீடியோ வைரலானது

தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணையம், அவரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில், பிரபல சிகையலங்கார நிபுணரான ஜாவீத் ஹபீப் என்பவர் சிகையலங்காரம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.

அவ்வாறாக சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் முசாபர் நகரில் பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்க வந்த ஒரு பெண்ணை மேடைக்கு அழைத்து அவருக்கு அலங்காரம் செய்து காட்டியுள்ளார்

அப்போது, சிகையலங்காரம் செய்ய பெண்மணியை இருக்கையில் அமர வைத்த நிலையில், அப்போது பெண்ணின் தலையில் எச்சில் துப்பி அவர் அலங்காரம் செய்ததாக வெளியாகியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெண்ணிடம் கேள்வி எழுப்பிய ஜாவீத் ஹபீப், தண்ணீர் இல்லாததால் தலைமுடி சிக்கலாக உள்ளது என்று கூறி எச்சிலை உமிழ்ந்து துப்புகிறார்.

இதனைக்கண்ட அவரது ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பவே, பெண்மணி எதுவும் கூற இயலாத விரக்தி நிலையில் இருந்தார். இந்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி பெரும் வைரலாகி கண்டனத்தை பெற்றது.

அதில் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஜாவேத் ஹபீப் தன்னை அவமானப்படுத்தும் விதமாக நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ குறித்த தகவல் தேசிய பெண்கள் ஆணையத்திற்கு தெரியவரவே, சிகையலங்கார நிபுணர் ஜாவீத் ஹபீபின் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய கூறி அம்மாநில காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version