- Ads -
Home சற்றுமுன் கவனம்: செல் பேசியபடி வந்த நபர்.. தண்டவாளத்தில் விழுந்த வீடியோ!

கவனம்: செல் பேசியபடி வந்த நபர்.. தண்டவாளத்தில் விழுந்த வீடியோ!

Falling on the rails

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் செல்போன் பார்த்தபடியே தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணியின் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

தில்லியில் உள்ள சதாரா மெட்ரோ நிலையத்தில் செல்போன் பார்த்துக்கொண்டே நடந்து வந்த ஷைலேந்தர் மேத்தா என்ற பயணி நடைமேடையின் விளிம்பில் இருந்து கீழே விழுந்தார்.

எதிர்ப்புற நடைமேடையில் வந்து கொண்டிருந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்களில் ஒருவர், விரைந்துச் சென்று தண்டவாளத்தில் இருந்து அந்தப் பயணியைத் தூக்கி நடைமேடையில் ஏற்றி விட்டார்.

மெட்ரோ ரயில் வரும்முன் பயணியை விரைந்து மீட்ட இந்தக் காட்சியை சிஐஎஸ்எப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version