- Ads -
Home சற்றுமுன் உணவகமாக மாறிய பழைய ரயில் பெட்டிகள்: நாக்பூர் ரயில் நிலையம்!

உணவகமாக மாறிய பழைய ரயில் பெட்டிகள்: நாக்பூர் ரயில் நிலையம்!

train restaurant

பழைய ரயில்வே பெட்டியை உணவகமாக மாற்றிய நாக்பூர் ரயில் நிலையம் முதன்முதலில் ‘Restaurant on wheels’ என புதுமையை செய்து அசத்தியுள்ளது.

நாக்பூர் கோட்டத்தின் கோட்ட ரயில்வே மேலாளர் ரிச்சா கரே இது குறித்து கூறுகையில், “பழைய பெட்டியை உணவகமாக மாற்ற டெண்டர் எடுத்துள்ளோம்.

இது ஹல்திராம் (Haldiram’s) நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. மக்கள் மிகவும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

மக்களிடம் கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில், மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற உணவகங்களைத் திறக்கும் திட்டம் உள்ளது என அவர் மேலும் கூறினார்.

NFR (non-fare revenue) கட்டணம் அல்லாத வருவாய் என்ற யோசனையின் அடிப்படையில், ரயில்வே சொத்துக்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தும் திட்டத்தின் கீழ் பழைய ரயில் பெட்டியை உணவகமாக வடிவமைத்தோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த தனித்துவமான உணவகத்தை அமைப்பதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசிய கரே, தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டியை சாலையில் கொண்டு செல்வது கடினமான பணியாக இருந்தது என்று கூறினார்.

கோவிட்-19 (COVID-19)இரண்டாவது அலை, பிறகு மூன்றாவது அலை காரணமாக, பணிகள் முடிக்க தாமதமானது .

இருப்பினும், எங்களின் இந்த புதுமையான யோசனையை மக்கள் விரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், உணவகத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள், ‘இது மகாராஜா எக்ஸ்பிரஸில் நாங்கள் சாப்பிடுவது போன்ற உணர்வைத் தருகிறது’ கூறினர்.

“இது ஒரு அழகான யோசனை. சாப்பாடு முதல் பானங்கள் வரை எல்லாமே இங்கே கிடைக்கும். இது ஒரு மூன்று நட்சத்திரங்கள் அல்லது ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட உணவகம் போல் இருக்கிறது” என்று மற்றொரு வாடிக்கையாளர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version