- Ads -
Home சற்றுமுன் இந்தியா தான்சானியா இடையேயான உயர் ஆணையருடன் கிலிபால்! வைரல்!

இந்தியா தான்சானியா இடையேயான உயர் ஆணையருடன் கிலிபால்! வைரல்!

#image_title
kivipaul

தமிழ் திரைப்பட பாடல்கள் , தெலுங்கு பாடல்கள் , ஹிந்தி திரைப்பட பாடலுக்கு அழகாக வாய் அசைத்து நடனமாடி இணையத்தில் பலரின் கவனம் பெற்று வைரலானவர்கள் கிலி பால் நீமா ஜோடி.

இவர்கள் இருவரும் அண்ணன், மற்றும் தங்கை இவர்கள் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒரு பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பல லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர். கிலி பால் நீமா ஜோடி தங்களுடைய பாரம்பரிய உடையை அணிந்து ரீல்ஸ் செய்யும் வீடியோ இணையத்தில் பலரின் கவனம் பெரும்.

சமீபத்தில் இந்திய குடியரசு தினத்திற்கு இவர்கள் வாயசைத்து செய்த வீடியோ இந்தியர்கள் பலரின் மனங்களை வென்றது. இந்த வீடியோவை பல லட்சம் பேர் லைக் செய்தனர். பலரின் பார்வையை பெற்று வைரலானது.

இந்திய நாட்டின் மீது கிலி பால் கொண்டிருந்த தேசபற்று இணையத்தில் பலரையும் ஈர்த்தது. தற்போது கிலிபால் குறித்த படம் ஒன்று ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.

இதே போன்று தெலுங்கில் வெளியான கவர்ச்சி பாடலான ஊ அண்ட்டவா மாமா பாடலையும் கிலிபால் வீடியோ செய்திருந்தார்.

இந்த பாடல் தெலுங்கில் மட்டுமன்றி தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடா போன்ற வேறு சில மொழிகளிலும் ரிலீஸ் ஆகியது. எல்லா மொழிகளிலும் அந்தந்த ரசிகர்களை அதிக அளவு இந்த பாடல் மக்களை கவர்ந்தது.

தற்போது கிலிபால் இந்தியா தான்சானியா இடையேயான உயர் ஆணையரை சந்தித்துள்ளார். அதன் படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ட்விட்டரில் பலரும் கிலிபாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version