- Ads -
Home சற்றுமுன் இந்த செயலியால் ஆபத்து.‌.. உடனே நீக்கவும்!

இந்த செயலியால் ஆபத்து.‌.. உடனே நீக்கவும்!

china apps

ஆண்டிராய்டு செல்போன்களுக்கு பாதுகாப்பான செயலிகளை கொடுக்கும் கூகுள் பிளே ஸ்டோரில், சில ஆபத்தான செயலிகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால், உடனடியாக இந்த செயலியை மொபைலில் இருந்து நீக்கிவிடுங்கள். இல்லையெனில் உங்களின் ஆன்லைன் பேங்கிங்கை டிராக்கிங் செய்து உங்கள் வங்கிக் கணக்கையும் காலி செய்துவிடும்.

அந்த செயலியின் பெயர் Xenomorph ஆப். இந்த செயலி மொபைலில் இருக்கும் தேவையற்ற பைல்களை நீக்கி, ஸ்பேஸ் அதிகரிக்க உதவும். சில பைல்கள் அல்லது லிங்குள் போனில் இருக்கும் இடத்தை ஆக்கிரமித்திருந்தால், ஜெனோமார்ப் செயலி, அவற்றை சரியாக அடையாளம் கண்டு நொடிப்பொழுதில் நீக்கிவிடும். இதன் மூலம் உங்கள் போனில் அதிகப்படியான காலி இடம் கிடைக்கும்

ஆனால், இந்த செயலி தான் ஐரோப்பாவில் ஏற்படும் வங்கி மோசடிகளுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜெனோமார்ப் செயலிகளில் ட்ரோஜன் இருப்பதை கண்டுபிடித்துள்ள நிபுணர்கள், ஆன்டிராய்டு மால்வேர் சாப்ட்வேர் என வகைப்படுத்தியுள்ளனர்.

இந்த மால்வேர் மிகவும் ஆபத்தானது. இது பயனர்களின் தரவை தீய வழியில் ஹேக் செய்கிறது. ஆன்லைன் பேங்கிங் ஆப்ஸின் பாஸ்வேர்டு ஐடிகளையும் முறைகேடாக சேகரித்துக் கொள்ளும்.

ஒரே ஒருமுறை ஜெனோமார்ப் செயலியை பதிவிறக்கம் செய்துவிட்டால், அப்போது இருந்து ​​உங்கள் ஃபோன் மற்றும் மானிட்டரின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கண்காணிக்கத் தொடங்கும்.

இதன்மூலம் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களைக் கொண்டு டெக் மோசடியாளர்கள் வங்கி மோசடியை அரங்கேற்றுகின்றனர் என்று Threat Fabric அறிக்கை கூறுகிறது.

சைபர் நிபுணர்களின் கொடுத்திருக்கும் தகவல்களின்படி, 50,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version