- Ads -
Home சற்றுமுன் ரயில் டிக்கெட் பதிவு செய்யணுமா? ஈஸியாக பண்ணுங்க.. ஹேப்பியா இருங்க..!

ரயில் டிக்கெட் பதிவு செய்யணுமா? ஈஸியாக பண்ணுங்க.. ஹேப்பியா இருங்க..!

#image_title
train service

ரயில் பயணம் செய்வோருக்கான டிக்கெட் புக்கிங் செய்வதை எளிதாக்கும் வகையில் பேடிஎம் மூலம் ரயில் டிக்கெட்டை பதிவு செய்வதற்கான வசதி அறிமுகமாகியுள்ளது.

இதன்படி பேடிஎம் மூலம் பணம் செலுத்தி ஆட்டோமேட்டிக் ரயில் டிக்கெட் எந்திரங்களில், டிக்கெட்டை பெறலாம்.

இதற்காக ஐஆர்சிடிசி நிறுவனம் பேடிஎம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் ரயில் பயணிகள் மிகவும் எளிதான முறையில் பேடிஎம் வழியாக உடனடியாக ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

Paytm ஆப் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்வது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் இயந்திரத்தில் பயணம் செய்யும் இடத்தை தேர்வு செய்யவும்.

கட்டணம் செலுத்த Paytm UPI ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

QR Code ஸ்கேன் செய்யவும்.

பரிவர்த்தனை முடிந்தவுடன் இயந்திரம் வழியாக ரயில் டிக்கெட் கிடைக்கும்.

இந்த புதிய வசதி மூலம் ரயில் பயணிகள் மிக எளிதான முறையில் டிக்கெட் பெற முடியும். மேலும், இந்த வசதி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும் .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version