- Ads -
Home சற்றுமுன் ராதாவை கொடுத்த கிருஷ்ணனுக்கு நன்றி: ஷ்ரேயா போட்ட பதிவு!

ராதாவை கொடுத்த கிருஷ்ணனுக்கு நன்றி: ஷ்ரேயா போட்ட பதிவு!

Shreya

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா . தொடர்ந்து ஜெயம்ரவியுடன் மழை, ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக சிவாஜி மற்றும் கந்தசாமி, அழகிய தமிழ்மகன், திருவிளையாடல் ஆரம்பம், தோரணை உள்பட ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் ஸ்ரேயா.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தினார்.

தனது கணவருடன் இருக்கும் வீடியோ போட்டோவை பகிர்ந்து இணையத்தையே தெறிக்கவிட்டார். இதையடுத்து, திடீரென தனக்கு பெண்குழந்தை பிறந்து இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ஒரு வருடமாக கர்ப்பமாக இருப்பதை மறைத்துவைத்திருந்து திடீரென குழந்தைபிறந்த செய்தியை வெளியிட்டார். 2015 ஆம் ஆண்டு வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமானத்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம் 2 இந்தி ரீமேக்கில் ஸ்ரேயா நடிக்கிறார்.

த்ரிஷ்யம் 2 படத்தில் அஜய் தேவ்கன், தபு மற்றும் இஷிதா தத்தா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை அபிஷேக் பதக் இயக்குகிறார்.

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில், தனது குழந்தையுடன் விளையாடும் 3 புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படகளுக்கு கீழே, தனது கணவரை டேக் செய்து, ராதாவை கொடுத்ததற்கு நன்றி கிருஷ்ணா என்று எழுதியிருக்கிறார்.

இந்த பதிவை வெளியிட்ட நான்கு மணிநேரத்தில் ஐம்பதாயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை எடுத்ததற்காக கணவரின் சகோதரியை டேக் செய்து நன்றி தெரிவித்திருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version