- Ads -
Home சற்றுமுன் சம்பளமும் கொடுக்காமல் கட்டி வைத்து கடை ஊழியரை அடித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

சம்பளமும் கொடுக்காமல் கட்டி வைத்து கடை ஊழியரை அடித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

vijay fan

கடை ஊழியருக்கு சம்பளமும் கொடுக்காமல், கட்டி வைத்து அடித்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவமும், அதைத் தொடர்ந்த கைது நடவடிக்கைகளும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

விஜய் மக்கள் இயக்கத்தின் பல்லாவரம் செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி பொருளாளர் அன்சர் என்னும் அனிஷ். இவர், பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பல்லாவரம் பகுதியில் ஐஸ் கடை நடத்தி வருகிறார் அனீஷ் .

அனீஷின் கடையில் பல்லாவரத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் வேலை செய்து வந்திருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே பாலாஜிக்கு அனீஷ் சரியாக ஊதியம் தராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாலாஜி கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை.

பாலாஜி வேலைக்கு செல்லாத சமயத்தில் அனீஷின் கடையில் 10 ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும் 3 செல்போன்கள் காணாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது.

3 நாட்களாக பாலாஜி வேலைக்கு வராததால் அவர்தான் செல்போன்கள் மற்றும் பணத்தையும் எடுத்திருக்க வேண்டும் என்று அனீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், தனது நண்பர்களை அழைத்துச் சென்று, பம்மல் பகுதியில் இருந்த பாலாஜியை சென்று பார்த்து விசாரித்திருக்கிறார்.

தான் எதையும் எடுக்கவில்லை என்று பாலாஜி மறுத்ததால் ஆத்திரமடைந்த அனீஷ், பாலாஜியை கட்டி வைத்து, உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பாலாஜி கிழே விழுந்ததும் அனீஷ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பாலாஜியை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்திற்காக ஐந்துக்கும் அதிகமான தையல் போடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி அன்சர்(எ) அனீஷ் மற்றும் அபிப்ரகுமான், மனோஜ், முகேஷ், ராஜேஷ், மாதவன், சரத்,
சீனு(எ) பாலகுமார், நிசார் அகமது உட்பட 9 பேருரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version