- Ads -
Home சற்றுமுன் மயிலம் தேரோட்டம்… கோலாகலம்:

மயிலம் தேரோட்டம்… கோலாகலம்:

பிரசித்திபெற்ற மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்தர திருவிழாவை ஒட்டி தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் பல்வேறு நேர்ச்சை கள் செலுத்தி மயிலம் முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலத்தில் உள்ள மலைமீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்,  அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாைவை முன்னிட்டு கடந்த 9 ஆம் தேதி திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறும். விழாவின் சிகரமான கருதப்படும் திருத்தேரோட்டம் இன்று காலை துவங்கி நடைபெற்றது.

வள்ளி- தெய்வானையுடன் சமேதராக சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளிய தேரை பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், அமைச்சர் மஸ்தான் ஆகியோர் தேரை வடம்பிடித்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து அரோகரா கோஷத்துடன் மயிலம் மலையின் மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் வடம்பிடித்து தேரை இழுத்து வந்தது.. மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி காவடி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

18 ஆம் தேதி தீர்த்தவாரி, தபசு நிகழ்ச்சியும், 19 தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பொம்மபுர ஆதீனத்தின் இருபதாம் பட்டம் சுவாமிகள் தலைமையிலான திருமடத்தினர் செய்து வருகின்றனர்.

Villupuram murugan temple 2 164749224216x9 1

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version