- Ads -
Home சற்றுமுன் தமிழக பட்ஜெட் 2022 முக்கிய தகவல்கள்…

தமிழக பட்ஜெட் 2022 முக்கிய தகவல்கள்…

தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை இம்முறை ₹7000 கோடி குறைய உள்ளதாகவும்,
8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
மேலும் பட்ஜெட் உரையில் அவர் கூறியுள்ளதாவது,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சரின் செயல்பாட்டுக்கு அங்கீகாரம் ,மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

சமூக நல திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது .
மத்திய அரசின் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையால் ரூ20,000 கோடி இழப்பு ஏற்படும் பட்ஜெட் உரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் இந்தோ – ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும் .தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ரூ2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும்.தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
கொற்கையில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் .தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும்
.அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.
வானிலையை கணிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுகீடு செய்யப்படும்.
நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும்.

காவல்துறை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு 496.52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல் வழங்கப்படும்.
வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கால்நடை பராமரிப்புக்காக ரூ.20 கோடியில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் அமைக்கப்படும்.

சென்னைக்கு அருகே ரூ.200 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற அமைப்பை அரசு உருவாக்கும்.தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு செய்யப்படும்; தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
வனத்துறை பரப்பளவை அதிகரிக்க வன ஆணையம் அமைக்கப்படும்.

இல்லம் தேடிக் கல்வி திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது,அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.மேலும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சியும், ஆண்டுக்குள் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும்.

அரசு நிலங்களை குத்தகைக்கு விடும் சிக்கல்களை தீர்க்கவும், வெளிப்படையான குத்தகைக்கு விடவும் விரிவான ‘நில குத்தகை கொள்கை’ வகுக்கப்படும்.

அரசு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் கடமை; அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் உருவாக்க ப்படும்.

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும்.

பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் .19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ரூ.1019 கோடி செலவில் புதிய மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்.

அரசு பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் .அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ1000 வழங்கப்படும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.

விளிம்பு நிலையில் இருக்கும் இருளர் போன்ற பழங்குடி தமிழர்களுக்கு ரூ.20.7 கோடி மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்ட அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 20, 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல் – துறைமுகம் மேம்பாட்டு சாலை திட்டத்தை செயல்படுத்த ரூ5770 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ. 135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பருவ மழைக்காலங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்குவதால் போக்குவரத்து துண்டிப்பு; ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக்கப்படும்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ. 135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக ரூ.1300 கோடி வழங்கப்படும்.

2,213 பி.எஸ்6 டீசல் பேருந்துகள், 500 மின் பேருந்துகளும் இந்த ஆண்டு கொள்முதல் செய்யப்படும்.

கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.1,314 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொண்டுநிறுவனங்கள் மூலம் நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
முதல்கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோவையில் செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் நிதி நிலை கவலைக்குரியதாக உள்ளது; இழப்பை 100% அரசே ஏற்கவுள்ளது.

மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்திற்கு இந்த ஆண்டு 1,520 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில்,36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன்கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் அரசால் ஏற்படுத்தப்படும். இந்நூலகக் கட்டடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும். கடலூர், தாம்பரம், கும்பகோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாநகராட்சிகளை மேம்படுத்த தலா 10 கோடி என 60 கோடி ஒதுக்கீடு.

சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ. 911 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆய்வுகளின்படி, மன அழுத்தம் மற்றும் மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.இதனை கருத்தில் கொண்டு கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை, தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர் நிலை அமைப்பாக மேம்படுத்த ரூ40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.18,218 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடைய தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர் தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்; ₹100 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்க தேடல் திட்டம் உருவாக்கப்படும்.

புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலம் ரூ.50,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும்; செய்யாறு & கும்மிடிப்பூண்டியில் சரக்கு வாகன மையம் அமைக்கப்படும்.

கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ 79 கோடி நிதி உதவி வழங்கப்படும்.

தொன்மையான கோயில்களை சீரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

149 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் ரூ.190 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

பழமையான கோயில்களை போல, தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பழுது பார்க்க, புனரமைக்க 12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை வெஸ்லி தேவாலயம், நெல்லை கால்டுவெல் தேவாலயம், சென்னை நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏர்வாடி மற்றும் நாகூர் தர்கா ஆகியவை புனரமைக்கப்படும்.
இதுவரை இல்லாத அளவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை வலுப்படுத்தப்படும்.

நேர்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற முதல்வரின் உறுதியான நிலைப்பாட்டால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்யாமல் இங்கு அமர்ந்திருந்தால், ஊழல் தடுப்பு துறை வலுப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை கேட்டப்பிறகு நிச்சயம் வெளிநடப்பு செய்திருப்பார்கள்.

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம், நிதிநிலை சீராகும்போது செயல்படுத்தப்படும்.தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான தகுதியான பயனாளர்களை கண்டறியும் பணிகள் முழு மூச்சாக நடந்து வருகின்றன.மாநில நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும் போது இத்திட்டம் செயல்படுத்தப்படும் .என பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழக பட்ஜெட் உரையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.1 மணி நேரம் 54 நிமிடமிடத்தில் வாசித்து முடித்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து சபாநாயகர்‌அப்பாவு
அவையை ஒத்திவைத்தார் .

சட்டப்பேரவையில் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.வரும் 24ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் – சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அவை அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மார்ச் 21,22,23 ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும்.

24ம் தேதி முன்பண மானியக் கோரிக்கை மற்றும் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் பதிலுரையும் இருக்கும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

இந்தநிலையில் இந்த ஆண்டு நிதிநிலையை எடுத்துக்கொண்டால் ஒரு இக்கட்டான ஆண்டாக உள்ளது; முதல் முறையாக 7 ஆண்டுகளுக்கு பிறகு நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது.என நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version