- Ads -
Home சற்றுமுன் சபரிமலை ஐயப்பனுக்கு பம்பை நதியில் ஆராட்டு விழா…

சபரிமலை ஐயப்பனுக்கு பம்பை நதியில் ஆராட்டு விழா…

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டுதிருவிழா
இன்று பம்பை நதியில் கோலாகோலமாக நடைபெற்றது.
பெருமைமிகு சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி உத்திர ஆராட்டு உற்சாகம் கடந்த மார்ச் 9இல் கொடியேற்றதுதுடன் துவங்கியது.

சபரிமலையில் ஐயப்பனுக்கு நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றவை.

இது தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜை-வழிபாடுகள் நடைபெறும். எனவே இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.இதுபோல் பங்குனி உத்திர ஆராட்டு உற்சாகம் ‌மிகபிரபவமானது.

பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 8ஆம்தேதி மாலை 5.30 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்தார்.
மார்ச் 9இல் கோவில் சன்னிதான முற்றத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் காலை 10.30முதல் 11.30க்குள் திருவிழா கொடியினை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.முன்னதாக கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகளும் தினமும் பகலில் உற்சவபலி பூஜை உற்சவபலி தரிசனம் இரவு ஸ்ரீபூதபலி நடைபெற்றது.நேற்று மார்ச் 17இல் இரவு பள்ளிவேட்டை சரங்குத்தியில் நடைபெற்றது.
மார்ச் 18 இன்று காலை ஐயப்பன் சன்னிதானத்தில் இருந்து 28படிநடை இறங்கி யானை மீது அமர்ந்து பாம்பை க்கு புறப்பட்டு சென்றார்.பம்பை கணபதி கோயிலில் சுவாமிக்கு வரவேற்பு கொடுத்தனர்.பின்னர் பம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது ‌.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நாளை இரவு சபரிமலை கோயில் நடை அடைக்கப்படும்.இரவு அத்தாழ பூஜைக்குப்பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

FB IMG 1647597355381

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version