- Ads -
Home சற்றுமுன் நடிகர் சங்க தேர்தல் பாண்டவர் அணி வெற்றி…

நடிகர் சங்க தேர்தல் பாண்டவர் அணி வெற்றி…

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்
பாண்டவர் அணி சார்ப்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. ‘தேர்தல் செல்லாது’ என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணவும் உத்தரவிட்டது.

அதன்படி, இன்று காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி, பலத்த போலீஸ் பாதுகாப்புகளுடன் எண்ணப்பட்டு வந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 500 வாக்குகள் பதிவாகியிருந்தது. அதில் 1,150 வாக்குகள் தபால் மூலம் பதிவாகின. நடிகர் சங்க தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டன

விறுவிறுப்பாக நடிந்து வந்த வாக்கு எண்ணும் பணி சில காரணங்களால் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது. இந்நிலையில் பாண்டவர் அணி சார்ப்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1701 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக நடிந்து வந்த வாக்கு எண்ணும் பணி சில காரணங்களால் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது. இந்நிலையில் பாண்டவர் அணி சார்ப்பாக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷாலும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பெட்டிகளில் உள்ள வாக்கு எண்ணும் போது பதிவான வாக்குகளைவிட ஐந்து வாக்கு சீட்டுகள் அதிகமாக இருப்பதாகக் கூறி ஐசரி கணேஷ் அதிருப்தி தெரிவிக்கவே வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.  

வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து சங்கரதாஸ் அணியின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐசரி கணேஷ் கூறியதாது, இரு அணிகளில் எந்த அணி வந்தாலும ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் பதிவான மொத்த வாக்குகள் எத்தனை என்பதை அவர்கள் சொல்ல தாமதமானது. மொத்தம் பதிவான வாக்குகள் 1602, எல்லா பெட்டிகளையும் திறந்த அதிகாரிகள் ஒரு பெட்டியை மட்டும் திறக்க தாமதம் செய்தார்கள். கேட்டால் சாவி தொலைந்து விட்டது என்றார்கள். அதில்தான் எல்லா ரெகார்டுகளும் இருகின்றன. பிறகு பதிவான வாக்குகள் குறித்து அறிவிக்கப்பட்டது. பல பதவிகளுக்கு பதிவான வாக்குகள் 7,8 என்று அதிகமாக இருக்கின்றன, எப்படி அதிகமாகும். எது எப்படியோ இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தே ஆகவேண்டும். அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம் என்றார். பின்னர் வாக்கு எண்ணி முடிக்கப்பட்டு பாண்டவர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

IMG 20220320 WA0000

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version